Asianet News TamilAsianet News Tamil

IND vs AUS: டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இணையும் 2 ஆஃப் ஸ்பின்னர்கள்..!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நெட் பவுலர்களாக 2 ஆஃப் ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
 

Spinners Jayant Yadav and Pulkit Narang join Indian test squad as net bowlers for india vs australia test series
Author
First Published Feb 5, 2023, 3:49 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத்தில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. வரும் 9ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்குகிறது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு தகுதிபெறுவது கிட்டத்தட்ட உறுதி. 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி அந்த இடத்தை தக்கவைத்து ஃபைனலுக்கு முன்னேற, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 அல்லது 3-1 அல்லது 2-0 அல்லது 2-1 என ஜெயிக்க வேண்டும். எனவே இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.

IND vs AUS: ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிரான இந்திய அணியின் அஸ்திரம் இவர் தான்..! இர்ஃபான் பதான் அதிரடி

எனவே இந்த டெஸ்ட் தொடர் மிக முக்கியமான தொடர். இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளிலும் தரமான ஸ்பின்னர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள், இந்தியாவின் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய டாப் ஸ்பின்னர்களை சமாளிக்க வேண்டும். இந்திய வீரர்கள், சமகாலத்தின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான நேதன் லயனை சிறப்பாக எதிர்கொள்ளவேண்டும்.

இந்திய வீரர்கள் பொதுவாக ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு ஆடக்கூடிய வீரர்கள். ஆனால் அண்மைக்காலமாக விராட் கோலியே ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுவது இந்திய அணிக்கு கவலையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. எனவே இந்திய வீரர்கள் ஸ்பின் பவுலிங்கை நிறைய ஆடி தீவிர பயிற்சி எடுத்துவருகின்றனர்.

BBL: டைட்டில் வின்னர், ரன்னருக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? யார் யாருக்கு என்னென்ன அவார்ட்..? முழு விவரம்

இந்நிலையில், இந்திய வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீச ஜெயந்த் யாதவ் மற்றும் புல்கித் நவ்ரங் ஆகிய ஆஃப் ஸ்பின்னர்கள் நெட் பவுலர்களாக அணியில் இணைந்துள்ளனர். இருவருமே ஆஃப் ஸ்பின்னர்கள். ஜெயந்த் யாதவ் ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். புல்கித் நவ்ரங் என்ற 28 வயது டெல்லியை சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர் உள்நாட்டு போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios