BBL: டைட்டில் வின்னர், ரன்னருக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? யார் யாருக்கு என்னென்ன அவார்ட்..? முழு விவரம்
பிக்பேஷ் லீக் டைட்டில் வின்னர், ரன்னருக்கான பரிசுத்தொகை மற்றும் எந்தெந்த வீரர்கள் என்னென்ன விருதுகளை வென்றனர் என்ற முழு விவரத்தை பார்ப்போம்.
பிக்பேஷ் டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்த நிலையில், இன்றுடன் முடிந்தது. இன்று பெர்த்தில் நடந்த ஃபைனலில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸும் பிரிஸ்பேன் ஹீட்டும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவரில் 175 ரன்கள் அடிக்க, 176 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிக்பேஷ் டைட்டிலை வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி.
ஏற்கனவே 4 முறை (2013-2014, 2014-2015, 2016-2017, 2021-2022) பிக்பேஷ் டைட்டிலை வென்றிருந்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. கடைசியாக 2012-2013ல் கோப்பையை வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி 2வது முறையாக பிக்பேஷ் லீக் கோப்பையை வெல்ல எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை.
ரோஹித் கேம்ப், கோலி கேம்ப்னு 2 கேங்கா பிரிந்த இந்திய அணி..! சாமர்த்தியமாக கையாண்ட சாஸ்திரி
பிக்பேஷ் டைட்டிலை வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸுக்கு இந்திய மதிப்பில் ரூ.2.8 கோடி (தோராயமாக) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
ஃபைனலில் தோற்ற ரன்னர் அணியான பிரிஸ்பேன் ஹீட்டுக்கு ரூ.1.24 கோடி (தோராயமாக) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
ஃபைனலில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்து 32 பந்தில் 53 ரன்களை விளாசி பெர்த் ஸ்கார்ச்சர்ஸின் வெற்றிக்கு உதவிய அந்த அணியின் கேப்டன் அஷ்டான் டர்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த சீசனில் அதிக ரன்கள் (460 ரன்கள்) அடித்த ஆரோன் ஹார்டி கோல்டன் பேட்டை வென்றார். இந்த சீசனில் அதிக விக்கெட் (29 விக்கெட்) வீழ்த்திய சீன் அபாட் கோல்டன் ஆர்ம் விருதை வென்றார்.