IND vs AUS: அஷ்வின் மாதிரி ஒரு ஸ்பின்னரை வைத்து வெறித்தனமா பயிற்சி செய்யும் ஆஸ்திரேலிய வீரர்கள்! வைரல் வீடியோ
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் பவுலிங்கை எதிர்கொள்வது கடும் சவால் என்பதால், அஷ்வின் மாதிரியான ஒரு ஸ்பின்னரை பந்துவீச வைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகிவருகிறது.
பார்டர் - கவாஸ்கர் டிராபி:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத்தில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. வரும் 9ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்குகிறது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு தகுதிபெறுவது கிட்டத்தட்ட உறுதி. 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி அந்த இடத்தை தக்கவைத்து ஃபைனலுக்கு முன்னேற, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 அல்லது 3-1 அல்லது 2-0 அல்லது 2-1 என ஜெயிக்க வேண்டும். எனவே இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.
IND vs AUS: ஆஸ்திரேலியாகாரன் பயந்துட்டான்.. இதுதான் அதுக்கு சாட்சி..! தெறிக்கவிடும் கைஃப்
ஸ்பின்னர்களுக்கு சாதகம்:
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இரு அணிகளிலும் சீனியர் ஸ்பின்னர்கள் இருப்பதால், ஸ்பின்னை திறம்பட எதிர்கொள்ளும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இந்திய வீரர்கள் நேதன் லயனின் ஸ்பின்னை சிறப்பாக ஆடவேண்டும். அதேபோல சொந்த மண்ணில் செம கெத்தான ஸ்பின்னரான அஷ்வினை ஆஸ்திரேலிய அணி சமாளித்து சிறப்பாக ஆடினால் மட்டுமே அந்த அணிக்கு வெற்றி வசப்படும்.
பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறது இந்திய அணி - ரமீஸ் ராஜா
அஷ்வினை எதிர்கொள்ள வியூகம்:
அந்தவகையில், அஷ்வினை திறம்பட எதிர்கொள்ளவேண்டும் என்பதற்காக, அஷ்வினை போலவே பந்துவீசக்கூடிய இளம் ஸ்பின்னரான மகேஷ் பிதியா என்ற பவுலரை பந்துவீச வைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ரென்ஷா மற்றும் அவரை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மகேஷ் பிதியாவின் பவுலிங்கை எதிர்கொண்டு பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகிவருகிறது.