IND vs AUS: ஆஸ்திரேலியாகாரன் பயந்துட்டான்.. இதுதான் அதுக்கு சாட்சி..! தெறிக்கவிடும் கைஃப்
ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பார்த்து பயந்துவிட்டதாக டெஸ்ட் தொடருக்கு முன்பாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.
இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. மேலும், இந்த தொடர் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் தொடருமாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும். இப்போதைக்கு 75.56 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறுவது உறுதி.
பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறது இந்திய அணி - ரமீஸ் ராஜா
58.93 சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, அந்த இடத்தை வலுவாக தக்கவைத்து ஃபைனலுக்கு முன்னேற வேண்டுமானால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-0 அல்லது 3-0 அல்லது 2-1 அல்லது 3-1 என வெல்ல வேண்டும். எனவே இந்த தொடர் கடும் போட்டியாக இருக்கும். கடைசி 2 முறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி ஆஸி., மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடர்களை வென்றது. எனவே அதற்கு இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.
2004ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றதில்லை. 2004ல் ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியது. அதன்பின்னர் இந்த முறை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்புள்ளது என்று ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பார்த்து பயப்படுவதாக கூறியுள்ள முகமது கைஃப், அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய முகமது கைஃப், ஆஸ்திரேலிய அணி 18 வீரர்களுடன் இந்தியாவிற்கு வருகிறது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பார்த்து பயப்படுகிறது என்பதற்கு இதுவே சான்று. ஏனெனில் இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி 18 வீரர்களுடன் இந்தியாவிற்கு வந்ததில்லை. சொந்த மண்ணில் இந்திய அணி மிகுந்த பலம் வாய்ந்தது. இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது மிகக்கடினம்.
விராட் கோலி பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆடவில்லை. ஆனால் இந்த தொடரில் அவர் ஆடுகிறார். இந்திய அணி வலுவாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியும் வலுவான அணி. அந்த அணி வீரர்கள் நல்ல ஃபார்மிலும் உள்ளனர். ஆனால் இந்தியாவில் இந்தியாவை வீழ்த்துவது எளிது கிடையாது. அஷ்வின், ஜடேஜா, அக்ஸர், குல்தீப் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணி ஸ்பின்னை சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்தியாவிற்கு கடும் போட்டியளிக்க முடியும்.
IND vs AUS டெஸ்ட் தொடர்: விராட் கோலிக்கு இர்ஃபான் பதான் உருப்படியான அட்வைஸ்
2004ல் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி மிக வலுவானது. இப்போதைய ஆஸ்திரேலிய அணியும் அண்மைக்காலத்தில் டெஸ்ட்டில் நன்றாக ஆடியிருக்கிறது என்றாலும், கேப்டன்சி சர்ச்சை, ஸ்மித் - வார்னர் தடை சர்ச்சை என சில சர்ச்சைகள் உள்ளன. எனவே ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்று கைஃப் கூறியுள்ளார்.