கங்குலி தலைமையில் அவரது தளபதிகளுடன் களமிறங்கும் இந்தியா மகாராஜாஸ்..! உலக ஜெயிண்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா - உலக லெவன் மோதும் ஸ்பெஷல் போட்டி நடக்கவுள்ளது.
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த கிரிக்கெட் தொடரின் ஆணையர் ரவி சாஸ்திரி.
இம்முறை லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் 4 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன. மொத்தம் 15 போட்டிகள் நடக்கவுள்ளன.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, சௌரவ் கங்குலி தலைமையிலான இந்தியா மகாராஜாஸ் மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான உலக ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதும் சிறப்பு போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. செப்டம்பர் 16ம் தேதி இந்த போட்டி நடத்தப்படுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்த போட்டி நடக்கிறது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பையின் டாப் 3 பேட்டிங் ஆர்டர்..! 2 இடத்திற்கு 4 வீரர்களுக்கு இடையே போட்டி
இந்த போட்டியில் சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில், அவரது கேப்டன்சியில் அவரால் உருவாக்கப்பட்டு, பிற்காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய வீரேந்திர சேவாக், முகமது கைஃப், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் ஆகிய மிகச்சிறந்த வீரர்கள் ஆடுகின்றனர்.
யூசுஃப் பதான், பத்ரிநாத், பார்த்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஓஜா ஆகிய வீரர்களும் ஆடுகின்றனர். சூதாட்ட புகாரில் தடையை அனுபவித்து முடித்த ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த் ஆடுகிறார்.
செப்டம்பர் 16ம் தேதி நடக்கும் இந்த போட்டியில் மோதும் இந்தியா மகாராஜாஸ் மற்றும் உலக ஜெயிண்ட்ஸ் அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களை பார்ப்போம்.
இதையும் படிங்க - இவரை ஏன்யா இன்னும் புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க? இந்திய அணியில் சீனியர் வீரரின் தேர்வை விமர்சித்த கிரன் மோர்
இந்தியா மகாராஜாஸ் அணி:
சௌரவ் கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுஃப் பதான், பத்ரிநாத், இர்ஃபான் பதான், பார்த்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, பிரக்யான் ஓஜா, அசோக் டிண்டா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜொஹிந்தர் சர்மா, ரிதீந்தர் சிங் சோதி.
உலக ஜெயிண்ட்ஸ் அணி:
லெண்டல் சிம்மன்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஜாக் காலிஸ், சனத் ஜெயசூரியா, மேட் பிரயர், நேதன் மெக்கல்லம், ஜாண்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஹாமில்டன் மசகட்சா, மோர்டசா, அஸ்கர் ஆஃப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீல், கெவின் ஓ பிரயன், தினேஷ் ராம்டின்.