Asianet News TamilAsianet News Tamil

இது அனைவருக்கும் நடக்கும் – டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்ட புஜாரா, ரஹானே குறித்து கங்குலி விமர்சனம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அஜின்க்யா ரஹானே மற்றும் சட்டீஸ்வர் புஜாரா ஆகியோர் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Sourav Ganguly criticizes Pujara and Rahane, who were neglected in the Test series against South Africa Tour rsk
Author
First Published Dec 2, 2023, 9:08 PM IST

உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இதில், நடந்து முடிந்த 4 போட்டிகளின் படி, இந்தியா 3-1 என்று டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை இரவு பெங்களூருவில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

WPL Auction 2024: மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்திற்கு 165 வீராங்கனைகள் பதிவு: டிசம்பர் 9ல் ஏலம்!

இதற்கான இந்திய அணி தனித்தனியாக அறிவிக்கப்பட்டது. இதில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒயிட்பால் கிரிக்கெட் போட்டிகளில் தற்காலிகமாக ஓய்வு கேட்டுள்ளனர். இருவரும் ஒயிட்பால் கிரிக்கெட்டில் இல்லாதது பற்றிய குரல்கள் எதிரொலிக்கும் அதே வேளையில், அவர்களைத் தவிர 2 முன்னணி வீரர்கள் சுற்றுப்பயணத்திலிருந்து முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிரிக்கெட்டில் கொல்கத்தா தாதா என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலி பிசிசியின் இந்த முடிவை ஆதரித்துள்ளார்.

தெரிந்து கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்:

டி20 கேப்டன் – சூர்யகுமார் யாதவ்

ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் – கேஎல் ராகுல்

டெஸ்ட் கேப்டன் – ரோகித் சர்மா

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் இடம் பெறாத ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸில் ரூ.9 கோடி; அடிப்படையை விலையை ரூ.50 லட்சமாக நிர்ணயித்த தமிழக வீரர் ஷாருக் கான்!

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலிருந்து ரஹானே, புஜாரா வெளியேற்றம்:

அஜிங்க்யா ரஹானே மற்றும் சட்டீஸ்வர் புஜாரா இருவரும் நீண்ட காலமாக இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். ஆனால், மோசமான பார்ம், புதிய திறமை வாய்ந்த இளம் வீரர்கள் ஆகியவற்றின் காரணமாக ரஹானே மற்றும் புஜாரா இருவரும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஆனால், இதற்கு முன்னதாக அவர்கள் விளையாடிய கடைசி போட்டிகளை ரசிகர்கள் பார்த்துள்ளார்.

புஜாரா, ரஹானே குறித்து சவுரவ் கங்குலி தனது கருத்தை முன்வைத்தார்:

பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான சவுரவ் கங்குலி, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே, புஜாரா இருவரும் இல்லாதது குறித்து தனது கருத்தை மு வைத்தார். இருவரும் இந்தியாவிற்காக அவர் செய்தவற்றிற்கு தனது நன்றியை தெரிவித்தார்.

MS Dhoni Celebrate Friends Birthday Video: நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிய எம்.எஸ்.தோனி – வைரலாகும் வீடியோ!

ஒரு கட்டத்தில் நீங்கள் புதிய திறமைகளை கண்டறிந்து விளையாட வேண்டும். அது நடக்கும். இந்தியாவில் மகத்தான திறமைகள் உள்ளன. அணி முன்னேற வேண்டும். புஜாரா மற்றும் ரஹானே இந்தியாவிற்கு மகத்தான வெற்றிகளைப் பெற்றனர். விளையாட்டு எப்போதும் உங்களிடம் இருக்காது என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது இதனை கூறியுள்ளார்.

பாரம்பரிய உடையில் வந்த தமிழருக்கு விராட் கோலியின் உணவகத்தில் அனுமதி மறுப்பு: வீடியோ வெளியிட்ட ராவண ராம்!

மேலும், நீங்கள் எப்போதும் அணியில் இருக்க முடியாது. இது அனைவருக்கும் நடக்கும். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர்கள் செய்தவற்றிற்காக அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்திய அணியின் தேர்வுக்குழு புதிய முகங்களை விரும்புகிறார்கள். ஆதலால், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை நீக்குவது தான் ஒரே வழி என்று அவர் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios