பாரம்பரிய உடையில் வந்த தமிழருக்கு விராட் கோலியின் உணவகத்தில் அனுமதி மறுப்பு: வீடியோ வெளியிட்ட ராவண ராம்!
மும்பையில் உள்ள விராட் கோலியின் ஒன் 8 ரெஸ்டாரண்டில் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் சென்ற மதுரையைச் சேர்ந்த ராவண ராம் என்பவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் விராட் கோலி. நடந்து முடிந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். இதே போன்று உலகக் கோப்பை தொடரில் 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதும் பெற்றார்.
கூச் பெஹர் டிராபியில் மகன் விளையாடுவதை தனது மனைவியுடன் சேர்ந்து நேரில் கண்டு ரசித்த ராகுல் டிராவிட்!
இதைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருக்கும் விராட் கோலி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெறவில்லை. அவர், டெஸ்ட் தொடரில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் மும்பையில் ஒன் 8 ரெண்டாரண்ட் என்ற பெயரில் விராட் கோலி சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த ராவண ராம் என்பவர் உணவருந்த தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் சென்றுள்ளார்.
தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டரான வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: மும்பை வந்து ஜேடபிள்யூ JW Marriott, Juhu ஹோட்டல் அண்ட் ரெஸாட்டில் தங்கியுள்ளார். அங்கு உணவருந்தாமல் அருகிலுள்ள விராட் கோலியின் உணவகத்தில் உணவருந்தலாம் என்று தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வந்துள்ளார். ஆனால், அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் வேஷ்டி சட்டை அணிந்து வருவதற்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர்.
இதனால், ஏமாற்றமடைந்த மதுரையைச் சேர்ந்த ராவண ராம் என்பவர், தனது ஏமாற்றத்தையும், ஆதங்கத்தையும் வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பது தெரியவில்லை, ஆனால் இது போன்ற சம்பவம் இனிமேலும் நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமே கிளென் மேக்ஸ்வெல் தான்: நெட்டிசன்கள் கருத்து
ஆனால், உண்மையில் என்ன நடந்ததோ அதற்கு விராட் கோலியை குற்றம் சாட்ட முடியாது. முழுக்க முழுக்க உணவகத்தில் இருந்த ஊழியர்கள், அதிகாரிகள் தான் முழு பொறுப்பு என்று ரசிகர்கள் பலரும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.