தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டரான வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் மற்றும் தமிழகத்தின் முதல் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி ரமேஷ்பாபுவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி ரமேஷ்பாபு இன்று நடந்த 2023ம் ஆண்டுக்கான IV எல்லோபிரேகாட் ஓபன் செஸ் போட்டியின்போது 2500 என்ற செஸ் ரேட்டிங்கை தாண்டி, இந்தியாவின் 84வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார். அதோடு, கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லிக்கு பிறகு வைஷாலி இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார். இதன் மூலமாக வரலாற்றிலேயே முதல் முறையாக செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற முதல் உடன் பிறந்த ஜோடி என்ற சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த அக்கா தம்பியான வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ரமேஷ் பாபு நிகழ்த்தியுள்ளனர்.
வைஷாலி 2501.5 செஸ் ரேட்டிங் பெற்று பெண்கள் செஸ் தரவரிசைப் பட்டியலில் உலகத்திலேயே 11ஆவது இடத்திலும், இந்திய அளவில் 2ஆவது இடத்திலும் உள்ளனர். இதன் மூலமாக வரும் 2024 ஆம் ஆண்டு நடக்கும் செஸ் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக அவர், 14 வயது மற்றும் 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலக இளைஞர் சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ம்டுஹல் சர்வதேச செஸ் மாஸ்டராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமே கிளென் மேக்ஸ்வெல் தான்: நெட்டிசன்கள் கருத்து
இந்த நிலையில், வைஷாலி ரமேஷ் பாபுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மகத்தான வாழ்த்துக்கள் வைஷாலி, இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
2023 உங்களுக்கு சிறப்பாக அமைந்தது. உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தா உடன் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதரி சகோதரர் ஜோடியாக நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் உடன் பிறந்த ஜோடியாக வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
உங்கள் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், உங்கள் குறிப்பிடத்தக்க பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், எங்கள் மாநிலத்தில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான சான்றாகவும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.