இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி 45 ஆவது சதம் அடித்து அசத்தியுள்ளதைத் தொடர்ந்து சிராஜ் மற்றும் சகால் இருவரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ல இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதற்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

சச்சினின் சதம் சாதனையை முறியடித்த கிங் கோலி!

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களை குவித்தது. இதில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தனர். சுப்மன் கில் 60 பந்துகளில் 11 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் சேர்த்தார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். ஒருபுறம் தனது வானவேடிக்கையை காட்டி வந்த ரோகித் சர்மா 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து தனது 47 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் நேற்று இறந்த தனது நாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வானத்தைப் பார்த்துவாறு பேட்டை உயர்த்தி காட்டினார். இறுதியாக 67 பந்துகளில் 3 சிக்சர்கள் 9 பவுண்டரிகள் உள்பட 83 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி படைத்த சாதனைகள்!

பின்னர் விராட் கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து இலங்கை பவுலர்களை திணற வைத்தனர். அதிரடியாக ஆடிய விராட் கோலி 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த போது கோலி கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் நழுவவிட்டார். இது அவருக்கு சாதகமாக அமைந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்னிலும், கே எல் ராகுல் 39 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 80 பந்துகளில் தனது 45 ஆவது சதத்தை நிறைவு செய்தார். இறுதியாக கோலி 87 பந்துகளில் ஒரு சிக்சர், 12 பவுண்டரிகள் உள்பட 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 400 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் சேர்க்க இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் சேர்த்தது.

IND vs SL: தசுன் ஷனாகாவின் போராட்ட சதம் வீண்..! முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இதையடுத்து 374 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணியில் பதும் நிசாங்கா 72 ரன்களும், கேப்டன் தசுன் ஷனாகா 108 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ODI-யில் 45வது சதமடித்து சாதனை படைத்த கோலி! மெகா ஸ்கோர் அடித்து இலங்கைக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சகால் மற்றும் முகமது சிராஜ் இருவரும் விராட் கோலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து சகால் கூறியிருப்பதாவது: ஒரு நாள் போட்டியில் சிறந்த தொடக்கம். புத்தாண்டில் புதுவிதமான தொடக்க கொடுக்க கிங் கோலிக்கு சிறப்பான வழி என்றும், அடுத்து கொல்கத்தா என்றும், பதிவிட்டுள்ளார். இதே போன்று முகமது சிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்ன வெற்றி! விராட் கோலியின் எலக்ட்ரிபையிங் இன்னிங்ஸ். நன்றி கவுகாத்தி. அடுத்ததை நோக்கி என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் கதவை ஓங்கி தட்டும் பிரித்வி ஷா..! ரஞ்சி போட்டியில் ஒரே நாளில் 240 ரன்களை குவித்து சாதனை

Scroll to load tweet…

Scroll to load tweet…