ODI-ல் முதல் சதமடித்த ஷுப்மன் கில்! கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஷுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் 50 ஓவரில் 289 ரன்களை குவித்து 290 ரன்கள் என்ற கடின இலக்கை ஜிம்பாப்வேவுக்கு நிர்ணயித்துள்ளது.
 

shubman gill maiden odi century helps india to set tough taret to zimbabwe in last odi match

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்  ஆடிவருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும்  வெற்றி பெற்று  இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி ஆகிய இருவருக்கும் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருக்கும் இந்த போட்டியிலும் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க - ஆசிய கோப்பையிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு மாற்று வீரர் அறிவிப்பு

இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன்  கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் மந்தமாக தொடங்கினர். இருவரில் ஒருவர் கூட அதிரடியாக ஆடவில்லை. ராகுல் 46 பந்தில் 30 ரன்கள் மட்டுமே அடித்தார். 68 பந்துகள் பேட்டிங் ஆடிய ஷிகர் தவான் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

3ம் வரிசையில் இறங்கிய ஷுப்மன் கில் மற்றும் 4ம் வரிசையில் இறங்கிய இஷான் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், இஷான் கிஷன் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - IND vs PAK: ஃபார்மில் இல்லைனாலும் கோலி செம கெத்துதான்..! உஷார்.. பாகிஸ்தானை எச்சரிக்கும் யாசிர் ஷா

ஆனால் அதன்பின்னரும் அபாரமாக பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். சதத்திற்கு பின்னரும் அடித்து ஆடி 30 ரன்களை சேர்த்தார். அதிரடியாக பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில் 97 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 130 ரன்களை குவித்தார். அவரது அதிரடி சதத்தால் 50 ஓவரில் 289 ரன்களை குவித்த இந்திய அணி, 290 ரன்கள் என்ற கடின இலக்கை ஜிம்பாப்வேவுக்கு நிர்ணயித்துள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios