இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத்தில் சுப்மன் கில் பயிற்சி- IND vs PAK போட்டியில் பங்கேற்பாரா?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 12 ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் நடக்க உள்ள நிலையில், சுப்மன் கில் அகமதாபாத் வந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வார்ம் அப் போட்டிக்காக இந்திய அணி திருவனந்தபுரம் சென்றிருந்தது. நெதர்லாந்து அணிக்கு எதிரான அந்த வார்ம் அப் போட்டியானது மழையால் பாதிக்கப்படவே போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து இந்திய வீரர்கள் சென்னை திரும்பினர். அப்போது சுப்மன் கில்லிற்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். இதில் கில்லிற்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மருத்துவ கண்காணிப்பில் இருந்த சுப்மன் கில் கடந்த 8ஆம் தேதி சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெற்றார். எனினும், இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதையடுத்து டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 9 ஆவது லீக் போட்டிக்காக இந்திய அணி டெல்லி வந்தது. அதில், சுப்மன் கில் இடம் பெறவில்லை. சுப்மன் கில்லிற்கு இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை ஒரு மைக்ரோலிட்டருக்கு 1,00,000 க்கும் கீழே குறைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 8ஆம் தேதி இரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஒரே ஒரு நாள் இரவு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னையில் உள்ள ஹோட்டல் அறையில் சுப்மன் கில் ஓய்வு எடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இடம் பெறாத சுப்மன் கில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இடம் பெறவில்லை.
IND vs AFG: ரன் ரேட்டில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியில் 2ஆவது இடம் பிடித்த இந்தியா!
இந்த நிலையில் தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இடம் பெறுவது கேள்விக்குறியாகியிருந்த நிலையில், தற்போது கில் அகமதாபாத் வந்து பயிற்சியை தொடங்கியுள்ளார்.. ஆப்கானிஸ்தான் அணியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அணியும் அகமதாபாத் சென்றுள்ளது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சுப்மன் கில் இதுவரையில் பயிற்சி மேற்கொள்ளாத நிலையில், இன்றும், நாளையும் பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே அவரால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம் முடியும்.
ஒருவேளை அவர் பயிற்சி மேற்கொள்ளாத நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவது என்பது சந்தேகம் தான். இந்த உலகக் கோப்பை 2023 சீசன் சுப்மன் கில்லிற்கு முதல் சீசன் என்பதால், இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- CWC 2023
- Hashmatullah Shahidi
- ICC Cricket World Cup 2023 schedule
- ICC cricket world cup 2023
- IND vs AFG live
- IND vs AFG live match world cup
- IND vs AFG live streaming
- IND vs PAK
- IND vs PAK live
- IND vs PAK live streaming
- India vs Afghanistan cricket world cup
- India vs Afghanistan live
- India vs Afghanistan world cup 2023
- India vs Pakistan
- India vs Pakistan cricket world cup
- Rohit Sharma
- Shubman Gill
- World Cup 2023 fixtures
- World cup cricket live scores
- cricket world cup 2023 news
- cricket world cup tickets
- watch IND vs AFG live
- world cup IND vs AFG venue