கோலிவுட் முதல் பாலிவுட் வரை... இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பார்க்க படையெடுக்கும் சூப்பர்ஸ்டார்களின் லிஸ்ட் இதோ
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டியை காண திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் அகமதாபாத் செல்ல உள்ளார்களாம்.
India vs Pakistan
50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்படுகிறது. கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Ind vs Pak World cup match
இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடி 272 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Ind vs Pak
முதல் இரண்டு போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி தற்போது புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி வருகிற அக்டோபர் 14-ந் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆர்வமாக உள்ளார்களோ, அதேபோல் திரைப்பிரபலங்களும் ஆர்வமாக உள்ளனர்.
Amitabh bachchan, Rajinikanth
அதன்படி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் இந்தி நடிகர் வருண் தவான் ஆகியோர் நேரில் இப்போட்டியை கண்டுகளிக்க உள்ளார்களாம். இந்த போட்டியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதால் அகமதாபாத் நகரில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாளைய போட்டி தொடங்கும் முன் இந்தி பாடகர் அர்ஜித் சிங்கின் இசை கச்சேரியும் நடைபெறும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள விஜய் டிவி பிரபலம்... ஆஹா இவங்க டேஞ்சரான ஆளாச்சே!