2வது இன்னிங்ஸில் கில், புஜாரா சதம்.. வங்கதேசத்திற்கு மெகா இலக்கை நிர்ணயித்து வெற்றியை உறுதி செய்த இந்தியா
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் முடிவில் 254 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் கில், புஜாராவின் அபாரமான சதங்களால் 258 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. மொத்தமாக 512 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 513 ரன்கள் என்ற மெகா இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்து வெற்றியை உறுதி செய்தது.
இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (கேப்டன்), புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
வங்கதேச அணி:
ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், யாசிர் அலி, நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹசன் மிராஸ், டைஜுல் இஸ்லாம், காலித் அகமது, எபடாட் ஹுசைன்.
BBL: ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பவுலிங்கை அடித்து நொறுக்கி ஜோ கிளார்க் சதம்..! மெல்பர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல்(22) மற்றும் ஷுப்மன் கில் (20), கோலி(1)ஆகியோர் ஏமாற்றமளித்தனர். ரிஷப் பண்ட் 46 ரன்கள் அடித்தார். புஜாரா -ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடி 149 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கிய புஜாரா 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் களமிறங்கிய அக்ஸர் படேல் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்திருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் இருந்தார். 2ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 86 ரன்களுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அஷ்வின் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 58 ரன்களையும், குல்தீப் யாதவ் 40 ரன்களையும் விளாச முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது இந்திய அணி.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹுசைன்(0), ஜாகிர் ஹசன்(20) ஆகிய இருவரையுமே சிராஜ் ஆரம்பத்திலேயே வீழ்த்தினார். யாசிர் அலியை 4 ரன்களுக்கு உமேஷ் யாதவ் வீழ்த்த, 4ம் வரிசையில் இறங்கிய லிட்டன் தாஸை(24) ரன்களுக்கு சிராஜ் வீழ்த்தினார். அதன்பின்னர் முஷ்ஃபிகுர் ரஹிம்(28), ஷகிப் அல் ஹசன் (3), நூருல் ஹசன்(16) மற்றும் டைஜுல் இஸ்லாம்(0) ஆகிய நால்வரையும் குல்தீப் யாதவ் வீழ்த்த, 102 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட வங்கதேச அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்திருந்தது. 3ம் நாள் ஆட்டத்தின் சிறிது நேரத்திலேயே எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
எப்போ எப்படி ஆடணும்னு கோலிக்கு தெரியும்.. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்..! ராகுல் டிராவிட் புகழாரம்
254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு இளம் தொடக்க வீரரான ஷுப்மன் கில் அபாரமாக பேட்டிங் ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 110 ரன்களை குவிக்க, முதல் இன்னிங்ஸில் சதத்தை தவறவிட்ட புஜாரா, 2வது இன்னிங்ஸில் சதமடித்தார். புஜாரா 102 ரன்களுடன் களத்தி இருக்க, 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை குவித்தது இந்திய அணி.
மொத்தமாக 512 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 513 ரன்கள் என்ற கடின இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்து வெற்றியை உறுதி செய்தது.