ஒரே மாதிரியாக ஆட்டமிழந்த கில், புஜாரா: வைரலாகும் கார்பன் காபி புகைப்படம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சுப்மன் கில் மற்றும் சட்டேஷ்வர் புஜாரா இருவரும் ஒரே மாதிரியாக ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.

Shubman Gill and Cheteshwar Pujara both of them are Carbon Copy Dismissals against Australia in WTC Final

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் இந்தியா டாஸ் வென்றது. ஆனால், பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 327 ரன்கள் குவித்தது. பின்னர் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 429 ரன்கள் குவித்தது.

என்ன சோனமுத்தா போச்சா: டுவிட்டரில் தாறுமாறாக வைரலாகும் ”ஜோக்கர்” ரோகித் சர்மா மீம்ஸ்!

பின்னர், ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சரி, அவர் தான் ஆட்டமிழந்துவிட்டார், சுப்மன் கில் இருக்கிறார் என்று சந்தோஷப்பட்ட நிலையில், அவரும் 13 ரன்களில் கிளீன் போல்டானார். ஒருகட்டத்தில் 30 ரன்களில் இந்தியா 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதுமட்டுமின்றி 6.4 ஓவர்களில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100ஆவது கேட்சை பிடித்து ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் ஆக்கிய ரஹானே!

அதன் பிறகு சட்டேஷ்வர் புஜரா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்தனர். ஆனால், புஜாரா 14 ரன்களாக இருந்த போது கில் ஆட்டமிழந்ததைப் போன்று ஒரே மாதிரியாகவே ஆட்டமிழந்துள்ளார். அவர் கேமரூன் க்ரீன் பந்தில் ஆட்டமிழந்தார். கில், ஸ்காட் போலண்ட் பந்தில் வெளியேறினார். ஆனால், இருவரும் அச்சு அசல் கார்பன் காபி ஒரே மாதிரியாக ஆட்டமிழந்து வெளியேறினர். விராட் கோலியும் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஐபிஎல் டிராபியுடன் ஆந்திரா முதல்வரை சந்தித்த அம்பத்தி ராயுடு, சிஎஸ்கே உரிமையாளர்!

ஆனால், எவ்வளவு பெரிய முக்கியமான போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விட்டோம் என்ற வருத்தம் கூட இல்லாமல் வெளியில் சென்ற விராட் கோலி கையில் தட்டை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒருபுறம் அருமையாக ஆடிக் கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். அவர் 48 ரன்களில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

19 போட்டிகளில் 51 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்த முகமது சிராஜ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios