ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஷிப் இறுதி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதைத் தொடர்ந்து டுவிட்டரில் அவர் தொடர்பான மீம்ஸ் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 163 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 100ஆவது கேட்சை பிடித்து ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் ஆக்கிய ரஹானே!
அலெக்ஸ் கேரி 48 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஐபிஎல் டிராபியுடன் ஆந்திரா முதல்வரை சந்தித்த அம்பத்தி ராயுடு, சிஎஸ்கே உரிமையாளர்!
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். ஆஸி, கேப்டன் பேட் கம்மின்ஸ் ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அவர் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக தொடர்ந்து தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா இந்த முறையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
19 போட்டிகளில் 51 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்த முகமது சிராஜ்!
ஏற்கனவே டாஸ் ஜெயித்து பந்து வீச்சு தேர்வு செய்ததற்கும், ரவிச்சந்திரன் அஸ்வினை பெஞ்சில் அமர வைத்ததற்கும் முன்னாள் வீரர்கள் உள்பட ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்த நிலையில், தற்போது இக்கட்டான சூழலில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டுள்ளார்.
அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்ட இந்தியா: ஆஸ்திரேலியா 469க்கு ஆல் அவுட்!
