ஆசிய கோப்பைக்கு முன்னதாக ஷ்ரேயாஸ் ஐயர் பயிற்சி போட்டியில் விளையாடி 199 ரன்கள் குவித்துள்ளார்.

கடந்த பிரப்வரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்தது. இதில், கடைசி டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் விளையாட வரவில்லை. அதன் பிறகு எந்த போட்டியிலும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை.

பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்கள்.. பங்கேற்க தகுதி பெற்றார் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி - புதிய சாதனை!

ஐபிஎல் தொடரிலும் இடம் பெறவில்லை. அதன் பிறகு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கூட ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தான் லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

யுவராஜ் சிங் – ஹசல் கீச் தம்பதிக்கு 2ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது!

வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், முழு உடல் தகுதி பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில், ஆசிய கோப்பைக்கு முன்னதாக, இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டனர். அதில், மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 199 ரன்கள் குவித்து ஒரு ரன்னில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். மேலும், 50 ஓவர்கள் வரையிலும் முழுவதுமாக பீல்டிங்கும் செய்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சர் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்: பிபிசிஐ அறிவிப்பு