Asianet News TamilAsianet News Tamil

ஷிகர் தவானின் மொபைல் போனை ஆட்டைய போட்டு டான்ஸ் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர்!

தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி சோதனைக்கு உட்பட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Shreyas Iyer dance with Shikhar Dhawan in National Cricket Academy in Bangalore
Author
First Published Feb 5, 2023, 10:54 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் இந்தியா 3-0 என்று கைப்பற்றியது. இதையடுத்து நடந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்று கைப்பற்றியது. நியூசிலாந்து தொடரில் இடம் பெற்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர், பயிற்சியின் போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் தோற்று உலக குரூப் 2 சுற்றுக்கு தள்ளப்பட்ட இந்தியா!

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முழு உடல் பரிசோதனைக்கு உட்பட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவானுடன் டான்ஸ் ஆடியுள்ளார். தனது மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்த ஷிகர் தவானிடமிருந்து, பின்னாடியிருந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர், கையில் வைத்திருந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு ஹிந்தி பாடல் ஒன்றிற்கு டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். அவர் ஆடுவதையே பார்த்துக் கொண்டிருந்த ஷிகர் தவான், அதன் பிறகு அவரும் சேர்ந்து கொண்டு டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏன் பார்டர் கவாஸ்கர் டிராபி முக்கியம்: இதுவரையில் நடந்த டிராபி தொடரில் என்னென்ன சம்பவங்கள் நடந்தது?

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் இன்னும் முழு உடல் தகுதி பெறாத நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் முழு உடல் தகுதி பெறும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதி - அன்ஷா திருமண புகைப்படங்கள்!

கனவை தூள் தூளாக்கிவிட்டு கிரிக்கெட் விளையாடும் அக்‌ஷர் படேல்!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios