Asianet News TamilAsianet News Tamil

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் தோற்று உலக குரூப் 2 சுற்றுக்கு தள்ளப்பட்ட இந்தியா!

இரட்டையர் பிரிவு மற்றும் மாற்று ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றதால், உலகக் கோப்பை குரூப் 2 சுற்றுக்கு தள்ளப்பட்டுள்ளது.
 

India entered into the Davis Cup World Group II stage after loss in group I against Denmark
Author
First Published Feb 5, 2023, 10:22 AM IST

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி டென்மார்க்கின் ஹில்லராட் பகுதியில் நடந்து வருகிறது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 1 பிரிவில் இந்தியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. இதில், முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, டென்மார்க்கின் ஹோல்ஹர் ரூனேவை எதிர்கொண்டார். இதில், 2-6, 2-6 என்ற நேர்செட் கணக்கில் யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.

ஏன் பார்டர் கவாஸ்கர் டிராபி முக்கியம்: இதுவரையில் நடந்த டிராபி தொடரில் என்னென்ன சம்பவங்கள் நடந்தது?

இதன் மூலம், 0-1 என்ற கணக்கில் இந்தியா பின் தங்கியது. இதையடுத்து, நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான சுமித் நாகல், டென்மார்க்கின் ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் மோதினார். கிட்டத்தட்ட 2 மணிநேரம் 27 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் சுமித் நாகல் 4-6 என்று முதல் செட்டை கோட்டை விட்ட நிலையில் சுதாரித்துக் கொண்டு ஆடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதி - அன்ஷா திருமண புகைப்படங்கள்!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சுமித் நாகல் தொடரை 1-1 என்று சமன் செய்தார். இதையடுத்து நேற்று நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில்  இந்தியாவின் ரோகன் போபண்ணா - யுகி பாம்ப்ரி ஜோடி, டென்மார்க்கின் ஹோலகர் ரூனே மற்றும் ஜோகன்னெஸ் இங்கில்ட்சென் ஜோடியை எதிர்கொண்டது. எனினும், ரோகன் போபண்ணா ஜோடி 2-6, 4-6 என்று தோல்வி அடைந்தது. இதன் காரணமாக டென்மார்க் 2-1 என்று முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே 7-5, 6-3 என்ற நேர்செட் கணக்கில் இந்தியாவின் சுமித் நாகலை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலமாக டென்மார்க் 3-1 என்று முன்னிலை பெற்றது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஸ் குன்னேஸ்வரன், டென்மார்க்கின் எல்மெர் மொல்லரை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் குன்னேஸ்வரன் 6-4, 7(7), 6(1) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து டென்மார்க் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் காரணமாக முதல் முறையாக உலக குரூப் 2 சுற்றுக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

கனவை தூள் தூளாக்கிவிட்டு கிரிக்கெட் விளையாடும் அக்‌ஷர் படேல்!

Follow Us:
Download App:
  • android
  • ios