இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில், இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் மட்டுமல்லாது தீவிர உடற்பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். 

கேப்டன் ரோஹித் சர்மா உட்பட வீரர்கள் அனைவரும் உடற்பயிற்சிக்கூடத்தில் உடற்பயிற்சி செய்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அப்போது, இந்திய அணியின் ஸ்ட்ரெந்த் மற்றும் கண்டிஷனிங் கோச் நிக் வெப், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுலுக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். 

இணையான கயிறுகளை வைத்து செய்யும் உடற்பயிற்சியில் போட்டி வைக்கப்பட்டது. அந்த போட்டியில் 30 நொடிகளில், 50 முறை செய்த ஷ்ரேயாஸ் ஐயர், 45 முறை செய்த கேஎல் ராகுலை வீழ்த்தி வென்றார்.