இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரித் பும்ரா, கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உடல் நலம் பெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஜஸ்ப்ரித் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. இதே போன்று கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து ஜஸ்ப்ரித் பும்ரா, கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.

ரோகித் சர்மாவிற்குப் பதிலாக கேப்டனாகும் அஜிங்கியா ரஹானே?

இதையடுத்து, கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ரிஷப் பண்ட் குச்சி ஊன்றி நடப்பது போன்றும், படிக்கட்டில் ஏறி வருவதுமான வீடியோக்கள் வெளியாகியிருந்தது. இதன் மூலமாக அவர் விரைவில் குணமடைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா கோவை கிங்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை!

Scroll to load tweet…

பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடரில் கேஎல் ராகுல் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற வாய்ப்பு!

Scroll to load tweet…