India vs Sri Lanka 1st ODI Live: சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் எடுத்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர்!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஷிவம் துபே தனது முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

Shivam Dube Take his maiden ODI Wicket Against Sri Lanka in 1st ODI Match at Colombo rsk

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் மற்றும் ஷிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற்றுள்ளார். இதுவரையில் இரு அணிகளும் 168 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 99 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது.

ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிக்கு வாய்ப்பு கொடுத்த ரோகித் சர்மா – டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்!

அதோடு, இலங்கை 57 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 11 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. இதுவே இந்தியா ஹோம் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் 40 போட்டியிலும், அவேயில் 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தற்போது கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் அணியில் இட்ம பெற்றுள்ளனர். ஷிவம் துபே ஆல்ரவுண்டராக அணியில் இடம் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் இந்திய அணி ஒரு விக்கெட் கைப்பற்றிய நிலையில் 2ஆவது விக்கெட் எடுக்க தடுமாறியது.

கர்ப்பிணியாக இருந்தும் சாதனை படைத்த 10 பெண்கள்!

கடைசியாக ஷிவம் துபேவிற்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில், அவர் குசல் மெண்டிஸ் விக்கெட்டை கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு ஒரு பிறகு ஒருநாள் அணியில் இடம் பெற்ற ஷிவம் துபே, தற்போது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

Paris 2024 Olympics: வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவரா – அங்கீதா பகத் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!

இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலமாக இந்திய அணியில் அறிமுகமானவர் ஷிவம் துபே. சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8ஆவதாக களமிறங்கி 9 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் 7.5 ஓவர்கள் வீசி 68 ரன்கள் குவித்தார். தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம் பிடித்து தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியிருக்கிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios