Asianet News TamilAsianet News Tamil

4ம் வரிசையில் அவங்க 2 பேருல ஒருத்தர் இறங்குவாங்க. அதனால் அதுலாம் ஒரு மேட்டரே இல்ல!! ஷிகர் தவான் அதிரடி

உலக கோப்பையில் இந்திய அணியில் நான்காம் வரிசையில் யார் இறங்குவார் என்று ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார். 

shikhar dhawan opinion about 4th batting order in world cup
Author
India, First Published Apr 25, 2019, 10:26 AM IST

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாகவே இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக பார்க்கப்பட்ட ராயுடு, அண்மைக்காலமாக சொதப்பியதால் அவரை நீக்கிவிட்டு உலக கோப்பை அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். 

நடப்பு ஃபார்மின் அடிப்படையிலும் விஜய் சங்கர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால், தேவைப்படும்போது பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் விளக்கமளித்திருந்தார். இந்திய அணியில் நான்காம் வரிசை சிக்கல் நீண்டகாலமாக இருந்துவருகிறது. யுவராஜ் சிங்கிற்கு அடுத்த அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்காக பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டனர். 

shikhar dhawan opinion about 4th batting order in world cup

பல சோதனை முயற்சிகளுக்கு பிறகு ராயுடு உறுதி செய்யப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நடந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் அருமையாக ஆடி உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். 

விஜய் சங்கர் மிடில் ஓவர்களில் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து சிங்கிள் ரோடேட் செய்வதுடன் அவ்வப்போது பெரிய ஷாட்டுகளை அடித்தும் ஆடுகிறார். எனவே விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலும் அணியில் இருப்பதால் அவரை இறக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும் நான்காம் வரிசையை இந்த வீரருக்கு என்று உறுதி செய்யாமல், சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை களமிறக்குவதற்கான திட்டமும் உள்ளது. 

shikhar dhawan opinion about 4th batting order in world cup

நான்காம் வரிசைக்கு பல ஆப்சன்கள் உள்ளதால் பிரச்னையில்லை. இந்நிலையில் நான்காம் வரிசை குறித்து பேசிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், 4ம் வரிசை குறித்த விவாதத்திற்கே இடமில்லை. விஜய் சங்கர், கேஎல் ராகுல் ஆகிய இருவரும் உள்ளனர். எனவே இருவரில் ஒருவர் நான்காம் வரிசையில் இறங்குவார். இதுகுறித்து பயிற்சியாளரும் கேப்டனும் என்ன முடிவு செய்கிறார்களோ அதன்படி செயல்படுவோம் என்று தவான் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios