ஆல்டைம் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆஸி., முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷான் டைட். 

ஆஸி., அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷான் டைட். 2005ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஷான் டைட், ஆஸ்திரேலிய அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் 35 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

மிரட்டலான ஃபாஸ்ட் பவுலரான ஷான் டைட், தனது ஆல்டைம் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் லெவனை தேர்வு செய்துள்ளார். ஆல்டைம் ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய இருவரையும் தேர்வு செய்தார்.

3ம் வரிசை வீரராக ஆஸ்திரேலிய அணிக்கு 2 உலக கோப்பைகளை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங்கையும், 4ம் வரிசையில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார் ஷான் டைட்.

5ம் வரிசையில் லெஜண்ட் பிரயன் லாரா, 6ம் வரிசையில் கோலி, 7ம் வரிசையில் சிறந்த ஃபினிஷரான தோனி ஆகியோரை தேர்வு செய்த ஷான் டைட், ஸ்பின்னராக ஷேன் வார்னையும், ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம், க்ளென் மெக்ராத், ஷோயப் அக்தர் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான வெஸ்ட் இண்டீஸின் விவியன் ரிச்சர்ட்ஸை ஷான் டைட் தனது சிறந்த லெவனில் எடுக்கவில்லை.

ஷான் டைட் தேர்வு செய்த ஆல்டைம் ஒருநாள் லெவன்:

வீரேந்திர சேவாக், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, விராட் கோலி, தோனி, ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், க்ளென் மெக்ராத், ஷோயப் அக்தர்.