முதல் முறையாக ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்து சதம் விளாசி சாதனை படைத்த ஷர்துல் தாக்கூர்!

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணி வீரர் ஷர்துல் தாக்கூர் சிக்ஸர் அடித்து ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

Shardul Thakur hit his Maiden First Class Century in Ranji Trophy 2024 against Tamilnadu in 2nd Semi Final Match rsk

கடந்த ஜனவரி 5ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரானது ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில், புதுச்சேரி, ஜார்க்கண்ட், மணிப்பூர், ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு அண்ட் காஷ்மீர், இமாச்சல பிரதேசம், விதர்பா, பரோடா, ஒரிசா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, கோவா, ஆந்திரா என்று அந்தந்த மாநில அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

இதில், விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, சௌராஷ்டிரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திரா ஆகிய அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து நடந்த காலிறுதிப் போட்டிகளில் விதர்பா, தமிழ்நாடு, மத்தியபிரதேசம் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதில் 7ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாடு அணியானது அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், மும்பை மற்றும் பரோடா அணிகளுக்கு இடையிலான 2ஆவது காலிறுதிப் போட்டியானது டிராவில் முடிந்தது. இதில் மும்பை அரையிறுதிப்போட்டிக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று முதல் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், விதர்பா மற்றும் மத்தியப்பிரதேசம் அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியிலும், தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் 2ஆவது அரையிறுதிப் போட்டியிலும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் 0, என் ஜெகதீசன்4, பிரதோஷ் பால் 8, கேப்டன் சாய் கிஷோர் 1, இந்திரஜித் 11 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் தமிழ்நாடு அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. அதன் பிறகு வந்த விஜய் சங்கர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். இதில், விஜய் சங்கர் 44 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக முகமது, அஜித் ராம் 17 மற்றும் 15 ரன்கள் எடுக்கவே தமிழ்நாடு 64.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து மும்பை அணி பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர் பிரித்வி ஷா 5 ரன்களில் ஆட்டமிழக்க, பூபெலன் லால்வானி 15 ரன்களில் ஆட்டமிழந்தார். மோகித் அவஸ்தி 2, கேப்டன் அஜிங்கியா ரஹானே 19, ஷ்ரேயாஸ் ஐயர் 3, ஹார்திக் தாமோர் 35, சாம்ஸ் முலானி 0 ரன்களில் ஆட்டமிழக்கவே, முஷீர் கான் 55 ரன்கள் எடுத்து நடையை கட்டினார்.

பின்னர் வந்த ஷர்துல் தாக்கூர் மற்றும் தனுஷ் கோட்யான் இருவரும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில் ஷர்துல் தாக்கூர் சரமாரியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் 88 பந்துகளில் 95 ரன்கள் இருந்த போது சிக்ஸர் அடித்து ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். கடைசியாக ஷர்துல் தாக்கூர் 104 பந்துகளில் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தனுஷ் கோட்யான் 74 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios