பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஷாஹித் அஃப்ரிடிக்கு மிக முக்கியமான பதவி..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடைக்கால தேர்வுக்குழு தலைவராக ஷாஹித் அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆகி வரலாற்று படுதோல்வியை அடைந்தது. இந்த படுதோல்விக்கு பின், பாகிஸ்தான் கிரிக்கெட்டை மேம்படுத்த பல அதிரடி முடிவுகளும் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் இடைக்கால தேர்வுக்குழு தலைவராக முன்னாள் ஜாம்பவான் ஷாஹித் அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். அப்துல் ரசாக், ராவ் இஃப்டிகார் உள்ளிட்ட 4 பேர் அடங்கிய தேர்வுக்குழுவின் தலைவராக ஷாஹித் அஃப்ரிடி செயல்படவுள்ளார்.
IPL 2023: சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன்..! யார் யாருக்கு அணியில் இடம்..?
நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானில் நடக்கவுள்ள தொடருக்கான தேர்வுக்குழு தலைவராக இடைக்காலமாக நியமிக்கப்பட்டுள்ளார் அஃப்ரிடி. ஏற்கனவே முகமது வாசிம் தலைமையிலான தேர்வுக்குழு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுவதற்கு அறிவித்த பாகிஸ்தான் அணியை மறுபரிசீலனை செய்யுமாறு புதிய தேர்வுக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
IPL 2023: அடுத்த கேப்டன் யார்..? சிஎஸ்கே சி.இ.ஓ தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட்டை மேம்படுத்த முன்னாள் ஜாம்பவானான ஷாஹித் அஃப்ரிடிக்கு இந்த முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு முதல் 2018 வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஷாஹித் அஃப்ரிடி, 27 டெஸ்ட், 398 ஒருநாள் மற்றும் 99 டி20 போட்டிகளில் ஆடி 11,200 ரன்கள் அடித்துள்ளார்; 541விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.