Asianet News TamilAsianet News Tamil

இன்றைக்கு நீங்கலாம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறதுக்கு அவங்க 3 பேரும் தான் காரணம்.. உண்மையை உடைத்த சேவாக்

கிரிக்கெட் வீரர்கள் இன்றைக்கு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்கான காரணம் யார் என்ற ரகசியத்தை முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் போட்டு உடைத்துள்ளார். 
 

sehwag reveals 3 names who protest for cricket players salary hike
Author
India, First Published Apr 11, 2019, 11:15 AM IST

கிரிக்கெட் வீரர்கள் இன்றைக்கு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்கான காரணம் யார் என்ற ரகசியத்தை முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் போட்டு உடைத்துள்ளார். 

மற்ற நாடுகளை காட்டிலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இந்திய அணிக்காக ஆடுவதற்கான ஊதியமும் அதிகம்; ஐபிஎல்லில் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறார்கள்; அதுமட்டுமல்லாமல் வெற்றி பெற்றால் கிடைக்கும் வருவாயிலும் அதிகமான பங்கை பெற்றுவருகின்றனர். 

இதற்கெல்லாம் யார் காரணம் என்பதை தனது பேட்டிங்கை போலவே அதிரடியாக கூறியுள்ளார் சேவாக். டெல்லியில் நடந்த சர்வதேச பிரீமியர் கபடி லீக்கின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட சேவாக், மற்ற அனைத்து விளையாட்டையும் விட கிரிக்கெட் வீரர்கள் அதிகமான ஊதியம் பெற்றுவருகின்றனர். முன்பெல்லாம் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியம் குறைவுதான். போட்டிகளில் வென்றால் கிடைக்கும் வருவாயில் 20 சதவிகித்தை பிரித்துத்தான் அனைத்து வீரர்களுக்கும் பிசிசிஐ கொடுக்கும். 

sehwag reveals 3 names who protest for cricket players salary hike

இதை எதிர்த்து 2002ல் போராடினோம். வருவாயில் 26 சதவிகிதத்தை வழங்க வேண்டும் என்று போராடியதன் விளைவாக பிசிசிஐ அதற்கு ஒப்புக்கொண்டது. இது மற்ற அனைத்து விளையாட்டுகளையும் விட வீரர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச பங்குத்தொகை. அந்த போராட்டத்தின் விளைவாகத்தான் இன்று வீரர்கள் அதிகமான ஊதியம் பெற்றுவருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோரின் போராட்டமும் விடாமுயற்சியும் தான் காரணம். அவர்கள் அன்று போராடாமல் இருந்திருந்தால் இன்று வீரர்கள் அதிக ஊதியம் பெற முடியாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios