உலக கோப்பை  மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தயாராகிவருகின்றன.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நாளை அறிவிக்கிறது. 

உலக கோப்பைக்கான அணியை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய இடங்கள் உறுதி செய்யப்படாமல் இருப்பதால், இந்த இடங்களுக்கு யார் தேர்வாகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

இந்நிலையில், முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக், 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார். விஜய் சங்கர் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் அணியில் தேர்வு செய்துள்ளார். 

சேவாக் தேர்வு செய்துள்ள உலக கோப்பை அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, கேஎல் ராகுல், ஜடேஜா, விஜய் சங்கர், ரிஷப் பண்ட். 

இவர்களில் விராட் கோலி, ரோஹித், தவான், தோனி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய 7 பேரும் 2015 உலக கோப்பையில் ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சேவாக்கும் தனது டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார். 7 வீரர்கள் 2015 உலக கோப்பையில் ஆடியவர்கள் என்றும் 8 வீரர்கள் புதியவர்கள் என்றும் 2015 உலக கோப்பை அணியையும் தன்னுடைய தற்போதைய அணியையும் ஒப்பிட்டு பகிர்ந்துள்ளார்.