IPL 2023: அவன் ஆல்ரவுண்டர்லாம் இல்ல.. துண்டு துணுக்கு வீரர்.! இந்திய வீரரை கடுமையாக விமர்சித்த ஸ்காட் ஸ்டைரிஸ்

ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் ஆடிவரும் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரை துண்டு துணுக்கு வீரர் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் விமர்சித்துள்ளார்.
 

scott styris criticizes shardul thakur is bits and piece player amid ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், லீக் சுற்றில் இன்னும் சில போட்டிகளே எஞ்சியிருந்தாலும், இன்னும் பிளே ஆஃபிற்கு எந்த அணியும் முன்னேறவில்லை. சன்ரைசர்ஸ், டெல்லி அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளுமே பிளே ஆஃப் ரேஸில் இருப்பதால் போட்டி மிகக்கடுமையாக உள்ளது.

இந்த சீசனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகிய வீரர்கள் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியில் கதவை தட்டுகின்றனர். அதேவேளையில், பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் சரியாக ஆடாமல் சொதப்பிவருகின்றனர்.

அப்படி பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய வீரர்களில் பெரும்பாலானோர் கேகேஆர் அணியில் தான் உள்ளனர். சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல் மாதிரியான ஐபிஎல்லின் மிகப்பெரிய மேட்ச்  வின்னர்கள் சரியாக ஆடவில்லை. அந்தவரிசையில் கேகேஆர் அணியில் ஆடிவரும் ஷர்துல் தாகூரும் இணைந்துள்ளார்.

IPL 2023: ஐபிஎல்லில் அதிக டக் அவுட்.. ரோஹித் சர்மாவின் மோசமான சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்

ஷர்துல் தாகூர் மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். மிதவேகப்பந்துவீச்சு மட்டுமல்லாது பேட்டிங்கும் ஆடக்கூடியவர். பவுலிங்கில் சாமர்த்தியமாக செயல்பட்டு முக்கியமான தருணங்களில் விக்கெட்டை வீழ்த்தி கொடுக்கக்கூடியவர். ஆனால் இந்த சீசனில் அவரை கேகேஆர் அணி ஒரு பவுலராக பயன்படுத்த தவறிவிட்டது. வெறும் 5 விக்கெட் மட்டுமே ஷர்துல் தாகூர் வீழ்த்தியுள்ளார். அவருக்கு பவுலிங் வழங்காதது தான் அதற்கு காரணம்.

இந்த சீசனின் தொடக்கத்தில் ஷர்துல் தாகூர் ஒரு போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆட, அதன்பின்னர் அவரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடவைத்தது கேகேஆர் அணி. நல்ல பவுலரான அவரிடமிருந்து பவுலிங் பெர்ஃபாமன்ஸை பெற தவறவிட்டது. ஆனால் அந்த ஒரு போட்டியை தவிர ஷர்துல் தாகூர் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. 10 போட்டிகளில் வெறும் 110 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

இந்நிலையில், சஞ்சய் மஞ்சரேக்கரின் வாக்கியமான துண்டு துணுக்கு வீரர் என்ற வாக்கியத்தை கடன் வாங்கி, ஷர்துல் தாகூரை விமர்சித்துள்ளார் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ்.

IPL 2023: குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ரவீந்திர ஜடேஜாவை மட்டம் தட்டும் விதமாக அவரை துண்டு துணுக்கு வீரர் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இப்போது ஷர்துல் தாகூரை துண்டு துணுக்கு வீரர் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் விமர்சித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios