IPL 2023: ஐபிஎல்லில் அதிக டக் அவுட்.. ரோஹித் சர்மாவின் மோசமான சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்
ஐபிஎல்லில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற ரோஹித் சர்மாவின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. ஒவ்வொரு போட்டியின் முடிவும் புள்ளி பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். டெல்லி, சன்ரைசர்ஸை தவிர மற்ற அனைத்து அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால் அனைத்து அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுகின்றன.
அந்தவகையில், நேற்று நடந்த முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்சிபியும் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (55) மற்றும் க்ளென் மேக்ஸ்வெல்லின் (54) அரைசதங்கள், அனுஜ் ராவத்தின் அதிரடியான ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 171 ரன்கள் அடித்து, ராஜஸ்தானை வெறும் 59 ரன்களுக்கு சுருட்டி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆர்சிபி அணி.
IPL 2023: குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
இந்த சீசன் முழுக்கவே சொதப்பிவரும் தினேஷ் கார்த்திக், இந்த போட்டியிலும் ரன் அடிக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஐபிஎல்லில் 16வது முறையாக டக் அவுட்டாகி, அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ரோஹித் சர்மாவுடன் (16 முறை) பகிர்ந்துள்ளார். ஐபிஎல்லில் 16 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனையை ரோஹித் சர்மா தன்னகத்தே கொண்டிருந்த நிலையில், முதலிடத்தை அவருடன் பகிர்ந்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
இந்த வரிசையில் சுனில் நரைன் மற்றும் மந்தீப் சிங் (15) ஆகிய இருவரும் 2ம் இடத்தில் உள்ளனர். 14 முறை டக் அவுட்டான அம்பாதி ராயுடு 3ம் இடத்தில் உள்ளார்.