IPL 2023: குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இந்த சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், பிளே ஆஃபிற்கு முன்னேற 8 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதி.
பிளே ஆஃபில் ஒரு காலை ஏற்கனவே வைத்துவிட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும். அந்தவகையில் பிளே ஆஃபிற்குள் நுழைவதை உறுதிப்படுத்த வெற்றி கட்டாயத்துடன் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது.
பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்ட சன்ரைசர்ஸ் அணி, இனிவரும் 3 போட்டிகளிலும் ஜெயித்தாலும் அதற்கான பிளே ஆஃப் வாய்ப்பு, மற்ற அணிகளின் முடிவுகளையும் பொறுத்தே அமையும் என்பதால் சன்ரைசர்ஸுக்கு இனி வாய்ப்பில்லை. எனவே சன்ரைசர்ஸுக்கு இனி இழப்பதற்கு எதுவுமில்லை.
இன்று அகமதாபாத்தில் நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, அபினவ் மனோகர், மோஹித் சர்மா, ரஷீத் கான், முகமது ஷமி, நூர் அகமது.
IPL 2023: ராஜஸ்தானை வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து ஆர்சிபி அபார வெற்றி
உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், க்ளென் ஃபிலிப்ஸ், அப்துல் சமாத், டி.நடராஜன், மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.