டி20 உலக கோப்பை: கடைசி தகுதிப்போட்டியில் ஸ்காட்லாந்தின் ஜார்ஜ் முன்சி அரைசதம்..! ஜிம்பாப்வேவுக்கு எளிய இலக்கு
டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் கடைசி அணியை தீர்மானிக்கும் கடைசி தகுதிப்போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 132 ரன்கள் அடித்து, 133 ரன்கள் என்ற எளிய இலக்கை ஜிம்பாப்வேவுக்கு நிர்ணயித்துள்ளது.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு 8 முன்னணி அணிகள் நேரடியாக தகுதிபெற்ற நிலையில், எஞ்சிய 4 அணிகளை தீர்மானிக்க 8 அணிகள் கலந்துகொண்டு தகுதிச்சுற்று போட்டிகளில் ஆடின.
தகுதிச்சுற்று போட்டியில் க்ரூப் ஏ-விலிருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. க்ரூப் பி-யிலிருந்து அயர்லாந்து அணி முன்னேறிவிட்ட, இந்த க்ரூப்பிலிருந்து 2வது அணியை தீர்மானிக்கும் போட்டி ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது.
இதையும் படிங்க - ரிஷப் பண்ட்டின் தலையெழுத்து ஹர்திக் பாண்டியாவின் கையில்..! பெரும் குழப்பத்துக்கு கவாஸ்கர் சொல்லும் தீர்வு
ஹோபர்ட்டில் நடந்துவரும் இந்த போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி ஒரு முனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் மறுமுனையில் மற்றவீரர்கள் சோபிக்கவில்லை. மற்றொரு தொடக்க வீரரான மைக்கேல் ஜோன்ஸ் 4 ரன்னிலும், மேத்யூ க்ராஸ் ஒரு ரன்னிலும், ரிச்சி பெரிங்டன் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மெக்லியாட் 25 ரன்கள் அடித்தார். ஆனால் மந்தமாக பேட்டிங் ஆடி 26 பந்தில் அந்த 25 ரன்களை அடித்தார். அரைசதம் அடித்த ஜார்ஜ் முன்சி 51 பந்தில் 54 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் ஸ்காட்லாந்து அணி 132 ரன்கள் அடித்து, 133 ரன்கள் என்ற எளிய இலக்கை ஜிம்பாப்வேவுக்கு நிர்ணயித்துள்ளது.
இதையும் படிங்க - பந்து தலையில் பட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அதிரடி வீரர்..! பாகிஸ்தான் அணிக்கு மரண அடி
இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்; தோற்கும் அணி தொடரைவிட்டு வெளியேறும். எனவே இது நாக் அவுட் போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும். அதனால் இந்த 133 ரன்களையே ஜிம்பாப்வேவுக்கு ஸ்காட்லாந்து கடினமானதாக மாற்ற வாய்ப்புள்ளது.