டீப் ஃபேக்: போலி புகைப்படங்கள், வீடியோக்கள்: சீக்கிரம் நடவடிக்கை எடுங்க – சாரா டெண்டுல்கர் அறிக்கை!
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கர் போலி புகைப்படங்கள் (டீக் ஃபேக்) குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக பிரபலங்களின் போலி புகைப்படங்கள் மற்றும் போலி வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து ஆர்ட்டிபிஷியல் இண்டெல்லிஜென்ஸ் AI தொழிற்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது.
IPL 2024: ஐபிஎல் 2024 ஏலத்தில் உலகக் கோப்பையில் ஜொலித்த வீரர்களை எடுக்க காத்திருக்கும் சிஎஸ்கே!
ராஷ்மிகா மந்தனாவைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்கள், நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள சிறந்த தளம். அதில், வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள், தினந்தோறும் நடக்கும் நடவடிக்கைகள் இடம் பெறும்.
எனக்கு எக்ஸ் (முன்னாள் டுவிட்டர்) பக்கத்தில் எந்தவித அதிகாரப்பூர்வ கணக்கும் கிடையாது. இதன் காரணமாக எக்ஸ் நிர்வாகம் சம்மந்தப்பட்ட கணக்குகளை அறிந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
லக்னோ அணிக்கு டாட்டா காட்டி விட்டு மீண்டும் கேகேஆர் அணியில் இணைந்த கவுதம் காம்பீர்!