தனது பார்ட்னரை சந்திக்கவே இல்லை – சுப்மன் கில் உடனான காதல், டேட்டிங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்த சாரா அலி கான்!
பாலிவுட் நடிகை சாரா அலிகான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
கேதர்நாத், சிம்பா, லவ் ஆஜ் கல், கூலி நம்பர் 1 என்று பல படங்களில் நடித்தவர் நடிகை சாரா அலி கான். இவருக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கும் நீண்ட நாட்களாக காதல், டேட்டிங் குறித்து செய்தி வெளியாகி வந்தது. இதற்கு இருவருமே எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், தனக்கு கிரிக்கெட் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை.
தனக்கு வரக்கூடியவர் கிரிக்கெட் வீரராகவோ அல்லது தொழிலதிபராகவோ இருக்கலாம். ஆனால் அவர் மனரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் தன்னுடன் பொருந்த வேண்டும் என்று சாரா அலி கான் கூறினார். அப்படி தனக்கு வரக்கூடியவர் டாக்டர், நடிகர், தொழிலதிபர், கிரிக்கெட்டர் என்று யாராக கூட இருக்கலாம். ஆனால் அவர் மனரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் தன்னுடன், தனக்கு பொருத்தமானவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாக தகவல் வெளியாகி வருகிறதே அதற்கு உங்களது பதில் என்ன அவரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சாரா அலி கான், இதுவரையில் நான் அவரை பார்த்தது கூட கிடையாது. உண்மையாகவும், நேர்மையாகவும் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு வரப்போகிற நபரை நான் இதுவரையில் சந்திக்கவே இல்லை. சினிமாவில் இருப்பவர்களுக்கு இது போன்று வதந்திகள் வருவது எல்லாம் சகஜம் தானே என்று கூறியுள்ளார்.
கூல்டிரிங்ஸ் கொண்டு வந்து கொடுத்து ரோகித் சர்மாவுக்கு டிப்ஸ் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
மற்றொரு நேர்காணலின் போது சாரா எந்த வகையான துணையைத் தேடுகிறார் என்று கேட்கப்பட்டது - ஜாரா ஹட்கே அல்லது ஜாரா பச்கே? ஜாரா ஹட்கே மற்றும் ஜாரா பச்கே ஆகிய இருவரையும் தனக்கு வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், சுப்மன் கில் மற்றும் சாரா அலி கான் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக வலம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.