Asianet News Tamil

ஒரு கப்புல காபியை எடுத்துகிட்டு ரூமுக்கே வந்துட்டார் கங்குலி.. ஃபிளாஷ்பேக்கை பகிர்ந்து தாதாவை தாறுமாறா புகழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஸ்பின் பவுலரும் இங்கிலாந்து அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளருமான சாக்லைன் முஷ்டாக் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

saqlain mushtaq hails bcci president sourav ganguly
Author
England, First Published Dec 26, 2019, 2:26 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கங்குலி, சூதாட்டப்புகாரில் சிக்கி சின்னாபின்னமாகியிருந்த இந்திய அணியை, இளம் வீரர்களை கொண்டு வளர்த்தெடுத்து, அணியில் நல்ல சூழலை உருவாக்கி, வெற்றி பாதையில் அழைத்து சென்றவர். கங்குலியின் தலைமையில் தான் இந்திய அணி புதிய பயணத்தை தொடங்க ஆரம்பித்தது. இந்திய கிரிக்கெட்டிற்கு கேப்டனாக இருந்து மிகப்பெரிய பங்காற்றிய கங்குலி, தற்போது பிசிசிஐயி-யின் தலைவராகவும் அளப்பரிய பணிகளை ஆற்றிவருகிறார். 

Also Read - அது ஒரு ஃப்ளாப் ஐடியா.. பொறாமையில், தாதாவின் முன்னெடுப்பை மட்டம்தட்ட முயலும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்

பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றதுமே, வங்கதேசத்துக்கு எதிராக, இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தி காட்டிய கங்குலி, அடுத்ததாக, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மற்றொரு டாப் அணியை சேர்த்துக்கொண்டு சூப்பர் ஒருநாள் தொடரை நடத்த திட்டமிட்டுவருகிறார். 

இந்நிலையில், கங்குலி பிசிசிஐயின் தலைவராக இருந்து கண்டிப்பாக இந்திய கிரிக்கெட்டை வேறொரு தளத்திற்கு எடுத்துச்செல்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள சாக்லைன் முஷ்டாக், கங்குலி தனது மனதை வென்ற சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். 

கங்குலி குறித்து யூடியூபில் பேசியுள்ள சாக்லைன் முஷ்டாக், இந்திய அணியின் கேப்டனாக, அணியின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணியாற்றியுள்ளார் கங்குலி. அதேபோலவே பிசிசிஐயின் தலைவராகவும், இந்திய கிரிக்கெட்டை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்வார் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். 

Also Read - 2 ரன்னுமே செல்லாது.. இரண்டுமே டெட் பால்.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஸ்மித்துக்கும் அம்பயருக்கும் இடையே பாக்ஸிங்.. சர்ச்சை சம்பவத்தின் வீடியோ

நாங்கள் ஆடிய காலத்தில் மிகுந்த ஆர்வமுடன் ஆடுவோம். அப்போது, கடும் மோதல்களும் அரங்கேறும். நானும் அந்த மாதிரி மோதல்களில் எல்லாம் பங்கு பெற்றிருக்கிறேன். ஆனால் போட்டி முடிந்துவிட்டால், அவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஒன்றாகத்தான் இருப்போம். ஆனால், எனக்கு கங்குலியுடன் எப்போதுமே கருத்து வேறுபாடோ முரண்பாடோ மோதலோ இருந்ததேயில்லை. 

இந்திய அணி 2005-06ல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் வந்தபோது, நான் அப்போது, கவுண்டியில் சஸெக்ஸ் அணியில் ஆடினேன். அப்போது, சஸெக்ஸில் இந்திய அணிக்கு 3 நாள் பயிற்சி போட்டி ஒன்று இருந்தது. கங்குலி அந்த போட்டியில் ஆடவில்லை. அந்த சமயத்தில் நான் காயமடைந்து 35-37 வாரங்கள் ஆட முடியாத சூழலில், படுக்கையில் இருந்து ஓய்வெடுத்து வந்தேன். அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அப்போது, சஸெக்ஸ் அணி ஒரு போட்டியில் ஆடிக்கொண்டிருந்த போது, அதை காண்பதற்காக வந்திருந்த கங்குலி, நான் பால்கனியில் நிற்பதை பார்த்திருக்கிறார். ஆனால் எங்களது டிரெஸிங் ரூம் வேறு பக்கம் பார்த்திருக்கும் என்பதால், நான் அவரை கவனிக்கவில்லை. 

Also Read - பும்ராவுக்கு பச்சைக்கொடி காட்டிய தாதா.. நிம்மதி பெருமூச்சு விட்ட பும்ரா

ஆனால் என்னை கண்ட கங்குலி, உடனடியாக ஒரு கப் காபியை எடுத்துக்கொண்டு எங்கள் டிரெஸிங் ரூமிற்கு வந்தார். எனக்கு காபியை கொடுத்து, எனது உடல்நலத்தை மிகுந்த அக்கறையுடன் விசாரித்த அவர், குடும்பத்தினர் குறித்தும் விசாரித்தார். சுமார் 40 நிமிடங்கள் என்னுடன் அமர்ந்து பேசிவிட்டு சென்றார். அந்த சம்பவத்தின் மூலம் எனது மனதை முழுவதுமாக வென்றுவிட்டார் கங்குலி என்று சாக்லைன் முஷ்டாக் தெரிவித்தார். 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றாலே, போட்டியில் ஆட்டத்தில் மட்டுமல்லாமல் இரு அணி வீரர்களுக்கும் இடையேயான மோதலில் கூட அனல் தெறிக்கும். அதுவும் அப்போதைய இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றால் உச்சகட்ட பரபரப்பாக இருக்கும். இந்திய அணியில் கங்குலி, டிராவிட், சச்சின், சேவாக், யுவராஜ் சிங் - பாகிஸ்தான் அணியில் அன்வர், அஃப்ரிடி, யூனிஸ் கான், முகமது யூசுஃப், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் என போட்டி மிகக்கடுமையாக இருக்கும். 

அதனால் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியேயும் அப்படித்தான் இருப்பார்கள் என ரசிகர்கள் நினைத்திருக்கக்கூடும். அதுவும் கங்குலி சொல்லவே வேண்டாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்றும், களத்திற்கு வெளியே அனைவரும் நண்பர்கள் என்றும் பறைசாற்றும் விதமாக முஷ்டாக்கின் கருத்து அமைந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல், குறிப்பாக, இந்திய அணியின் அப்போதைய கேப்டன் கங்குலியை பற்றி அவர் கூறியிருப்பது, கிரிக்கெட்டில் மோதலும் போட்டி மனப்பான்மையும் களத்தில் மட்டுமே என்பதையும் கங்குலியை ஆக்ரோஷமான கேப்டனாக மட்டுமே நினைப்பவர்களுக்கு, அவரது மற்றொரு பக்கத்தையும் எடுத்துக்காட்டுவதாக முஷ்டாக்கின் கருத்து அமைந்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios