KL Rahul: கேஎல் ராகுல் வருகை, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன்!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பேக்கப் வீரராக இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன் தற்போது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில், முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2ஆவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டி தற்போது கொழும்பு மைதானத்தில் நடந்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் போட்டியானது நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் இன்று எதுவரையில் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டதோ அதிலிருந்து மீண்டும் போட்டியானது நாளை தொடங்கப்படும். இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு மட்டுமே, இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இந்த ரிசர்வ் டே கிடையாது.
Pakistan vs India Super Fours: பலத்த காற்றுடன் கனமழை; இந்தியா – பாகிஸ்தான் போட்டி நிறுத்தம்!
இது ஒரு புறம் இருக்க, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் இடம் பெற்ற சஞ்சு சாம்சான் 9, 51, 12, 7, 13 என்று மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய நிலையிலும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றார். அவர் 1*, 40 என்று ரன்கள் எடுத்திருந்தார். எனினும், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பேக்கப் வீரராக இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் பிளேயிங் 11ல் இடம் பெறவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியிலும், நேபாள் அணிக்கு எதிரான லீக் போட்டியிலும் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை. தற்போது நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார். ஆனால், ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக இடம் பெறவில்லை.
இந்த நிலையில் தான் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுக்காக கேஎல் ராகுல் இலங்கை வந்த நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் பேக்கப் வீரராக இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சனை அணி நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆதலால், அதிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.