IPL 2023: 2 சிக்ஸர் அடித்த தோனியை கட்டுப்படுத்தியது எப்படி..? சூட்சமத்தை சொன்ன சந்தீப் ஷர்மா

சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியில் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற சூழலில் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள் அடித்து மிரட்டிய தோனியை அதன்பின்னர் கட்டுப்படுத்தியது எப்படி என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் சந்தீப் ஷர்மா தெரிவித்துள்ளார்.
 

sandeep sharma reveals that how he manages to control ms dhoni in last over after hitting 2 sixes in csk vs rr match in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் நன்றாக ஆடிவரும் சிஎஸ்கே அணி, முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜோஸ் பட்லரின் அதிரடி அரைசதம்(52) மற்றும் தேவ்தத் படிக்கல்(38), அஷ்வின் (30), ஹெட்மயர்(30) ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவரில் 175 ரன்கள் அடித்தது.

IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. அம்பயர்களின் முடிவால் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த அஷ்வின்

176 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் கடைசியில் சிக்ஸர்களாக விளாசி கடுமையாக போராடிய போதிலும் 20 ஓவரில் 172 ரன்கள் அடித்து 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 17 பந்தில் 32 ரன்கள் அடித்து தோனி கடைசிவரை போராடியபோதிலும் சிஎஸ்கே அணியால் ஜெயிக்க முடியவில்லை. 

கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை தோனிக்கு 2முறை வைடாக வீசிய சந்தீப் ஷர்மா, அடுத்து வீசிய ரீபாலில் தோனி ரன் அடிக்கவில்லை. ஆனால் 2 மற்றும் 3வது பந்துகளில் 2 சிக்ஸர்களை விளாசினார். அந்த 2 பந்துகளையும் யார்க்கராக வீச நினைத்து சந்தீப் ஷர்மா மிஸ் செய்ததால் ஃபுல் டாஸாக சென்றது. அதனால் அந்த 2 பந்தையும் தோனி சிக்ஸர் அடிக்க, கடைசி 3 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அதன்பின்னர் கடைசி 3 பந்தில் 3 சிங்கிள் மட்டுமே கொடுத்து கட்டுப்படுத்தினார் சந்தீப் ஷர்மா. அதனால் ராஜஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் ஜெயித்தது.

IPL 2023: முழங்கால் காயத்தால் அவதிப்படும் தோனி..! தென்னாப்பிரிக்க வீரர் 2 வாரம் விலகல்

2 சிக்ஸர்கள் அடித்த தோனியை அதன்பின்னர் 2 பந்தில் 2 சிங்கிள் மட்டுமே கொடுத்து கட்டுப்படுத்தியது குறித்து பேசிய சந்தீப் ஷர்மா, எனது பலமே யார்க்கர்கள் தான். வலைப்பயிற்சியில் அதிகமான யார்க்கர்களை வீசித்தான் பயிற்சி செய்வேன். அதனால் எனது பலத்தின் மீது நம்பிக்கை வைத்து தோனியின் கால்களை நோக்கி யார்க்கர் வீச முயற்சித்தேன். ஆனால் அந்த 2 பந்துகளும் யார்க்கர் மிஸ் ஆகி ஃபுல் டாஸாக விழுந்தன. அதில் 2 சிக்ஸர்கள் அடித்துவிட்டார். அதனால் அரௌண்ட் தி விக்கெட் வந்து ஆங்கிலை மாற்ற முயற்சித்தேன். அந்த முயற்சி எனக்கு பலனளித்தது என்றார் சந்தீப் ஷர்மா.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios