அவரை அசால்ட்டா நெனச்சுராதீங்க! இந்திய வீரரை காட்டி பாகிஸ்தான் அணியை பகிரங்கமாக எச்சரிக்கும் முன்னாள் வீரர்

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில், விராட் கோலியை காட்டி பாகிஸ்தானை பயமுறுத்துகிறார் முன்னாள் வீரர் சல்மான் பட்.
 

salman butt warning pakistan team ahead of india clash in asia cup 2022

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஆகஸ்ட் 28ம் தேதி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. அதே நம்பிக்கையுடன் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அந்த சீனியர் வீரரை எடுத்தது ஆச்சரியம் தான்..! ஆகாஷ் சோப்ரா கருத்து

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில், அனுபவமும் இளமையும் கலந்த கலவையான நல்ல பேலன்ஸான வலுவான அணியாக இந்தியா இம்முறை களமிறங்குகிறது. 

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான விராட் கோலி ஃபார்மில் இல்லாதது மட்டுமே இந்திய அணிக்கு ஒரே பிரச்னை. ஆனால் கோலி ஸ்கோர் செய்யாவிட்டாலும், அதை ஈடுகட்டும் அளவிற்கான பேட்டிங் ஆர்டர் இந்திய அணியில் உள்ளது. ஆனால் கோலி நன்றாக ஆடினால் அந்த போட்டி வேற லெவலில் இருக்கும். கோலி ஸ்கோர் செய்தால் இந்தியா ஜெயித்துவிடும். எனவே ஃபார்மில் இல்லாத கோலி ஃபார்முக்கு வருவது இந்தியாவிற்கு முக்கியம்.

இதையும் படிங்க - 2011 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை திருப்பிய தோனியின் வியூகம்!ஹர்பஜன் சிங் பகிர்ந்த சுவாரஸ்யம்

இந்நிலையில், கோலி ஃபார்மில் இல்லையென்றாலும், அவரை காட்டி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார் சல்மான் பட். இதுகுறித்து பேசிய சல்மான் பட், விராட்கோலி அனுபவமும், திறமையும் நிறைந்த வீரர். அவர் எப்போது ஃபார்முக்கு வருவார் என்று இந்திய அணி எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. ஃபார்மில் இல்லாத ஏகப்பட்ட வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஃபார்முக்கு வந்ததை நாம் பார்த்திருக்கிறோம். எனவே கோலி ஃபார்முக்கு வந்துவிட்டால் அது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்னையாக அமைந்துவிடும் என்று சல்மான் பட் எச்சரித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios