Asianet News TamilAsianet News Tamil

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அந்த சீனியர் வீரரை எடுத்தது ஆச்சரியம் தான்..! ஆகாஷ் சோப்ரா கருத்து

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை தேர்வு செய்தது யாருமே யோசித்து பார்க்காதது என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.
 

aakash chopra opines ravichandran ashwin in india squad for asia cup 2022 was out of the box selection
Author
Chennai, First Published Aug 14, 2022, 8:09 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஆசிய கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய 2 முக்கியமான ஃபாஸ்ட்பவுலர்களும் காயம் காரணமாக இடம்பெறவில்லை. புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் எடுக்கப்பட்டுள்ளனர். சீனியர் ஃபாஸ்ட் பவுலரான முகமது ஷமி அணியில் எடுக்கப்படவில்லை.

அதேவேளையில், சீனியர் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வின் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க - 2011 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை திருப்பிய தோனியின் வியூகம்!ஹர்பஜன் சிங் பகிர்ந்த சுவாரஸ்யம்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.

விராட் கோலி கேப்டன்சியை ஏற்றதிலிருந்தே டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் அஷ்வின் சேர்க்கப்படவில்லை. ஆனால் 2021ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை அணியில் அஷ்வின் எடுக்கப்பட்டார். அந்த உலக கோப்பையில் அவர் சரியாக ஆடாததையடுத்து, அதன்பின்னர் மீண்டும் டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

கடைசியாக நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் அஷ்வின் எடுக்கப்பட்டார். ஐபிஎல்லில் ஜொலிக்காத அஷ்வின், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சோபிக்கவில்லை. ஆனாலும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வின் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - ஷிகர் தவான் எவ்வளவு பெரிய பிளேயர்.. அவரை இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே! இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்

இந்நிலையில், அஷ்வின் தேர்வு குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா,  கடந்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வின் தேர்வு செய்யப்பட்டதே சர்ப்ரைஸ் தான். யாருமே எதிர்பார்த்திராத தேர்வு அது. அதேபோலத்தான் இம்முறையும் டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆசிய கோப்பை ஆகிய தொடர்களுக்கான இந்திய அணியில் அஷ்வின் எடுக்கப்பட்டுள்ளார். இந்த உலக கோப்பைக்கான அணியிலும் இடம்பெறுவார் போல் தெரிகிறது. இது சரியா தவறா என்றெல்லாம் இல்லை. என்ன மாதிரியான ஸ்பின்னர் அணிக்கு தேவை என்பதை பற்றியது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios