உலக கோப்பை நெருங்கிய நிலையில், அனைத்து அணிகளும் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளன. 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் வலுவாக உள்ளன. 

உலக கோப்பையில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்டிங் குறித்து இன்னும் விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. விஜய் சங்கர் அல்லது கேஎல் ராகுல் நான்காம் வரிசையில் இறக்கப்பட வாய்ப்புள்ளது. தோனியையே நான்காம் வரிசையில் இறக்கலாம் எனவும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தோனி எந்த வரிசையில் பேட்டிங் ஆட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சச்சின், அணி நிர்வாகம் என்ன முடிவு செய்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் தோனி 5ம் வரிசையில் இறங்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ரோஹித், தவான், கோலி, இவர்களுக்கு அடுத்து நான்காவது வீரராக ஒருவரை களமிறக்கிவிட்டு 5ம் வரிசையில் தோனி இறங்கலாம். தோனிக்கு அடுத்து ஹர்திக் பாண்டியா இறங்கலாம். தோனி சூழலுக்கு ஏற்றவாறு ஆடுவதோடு டெத் ஓவர்களில் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து சிறப்பாக தோனி ஃபினிஷ் செய்து கொடுப்பார் என்று சச்சின் தெரிவித்துள்ளார்.