ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக புஷ்ஃபயர் கிரிக்கெட் பேஷ் போட்டி நடத்தப்பட்டது. அதில், பாண்டிங், லாரா, ஹைடன், லாங்கர், யுவராஜ் சிங், வாசிம் அக்ரம், பிரெட் லீ, கில்கிறிஸ்ட், சைமண்ட்ஸ் ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் கலந்துகொண்டு ஆடினர். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் ஒரு ஓவர் பேட்டிங் ஆடினார். 

இந்நிலையில், அடுத்ததாக இந்தியாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முன்னாள் லெஜண்ட் வீரர்கள் கலந்துகொண்டு ஆடும் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகளின் முன்னாள் லெஜண்ட் வீரர்கள் கலந்துகொண்டு ஆடுகின்றனர். 

இந்தியா லெஜண்ட்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் தலைமை தாங்குகிறார். சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணியில் சேவாக், யுவராஜ் சிங், சஞ்சய் பங்கார், முகமது கைஃப், இர்ஃபான் பதான், சமீர் திகே(விக்கெட் கீப்பர்), அஜீத் அகார்கர், ஜாகீர் கான், முனாஃப் படேல், பிரக்யான் ஓஜா, சாய்ராஜ் பஹுதுலே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

Also Read - இரட்டை சதங்களை சர்வ சாதாரணமா அடித்து குவிக்கும் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட்

இந்தியா லெஜண்ட்ஸ் அணி:

சச்சின் டெண்டுல்கர்(கேப்டன்), சேவாக், யுவராஜ் சிங், சஞ்சய் பங்கார், முகமது கைஃப், இர்ஃபான் பதான், சமீர் திகே(விக்கெட் கீப்பர்), அஜீத் அகார்கர், ஜாகீர் கான், முனாஃப் படேல், பிரக்யான் ஓஜா, சாய்ராஜ் பஹுதுலே.