எப்படி ஜெயிக்க வேண்டும்? இங்கிலாந்து அணிக்கு ஆலோசனை சொன்ன சச்சின் டெண்டுல்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் எப்படி இங்கிலாந்து அணி ஜெயிக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் 6ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. முதல் மற்றும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த போட்டியின் போது 2ஆவது இன்னிங்ஸில் ஆஸி, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவை ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது: முகமது கைஃப்!
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் வீரர்கள் முதல் பிரதமர்கள் வரை ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் என்று ஒவ்வொருவரும் விவாதம் செய்தனர். இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் மட்டுமே எடுத்து.
வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல; ஜூஜூபி, வரலாறு சொல்லுது!
இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், இங்கிலாந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸ் ஆடியது. இதில், ஆஸ்திரேலியா 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 251 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரையில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.
இந்த நிலையில், தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்த இங்கிலாந்துக்கு இந்தப் போட்டியில் எப்படி ஜெயிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹெடிங்லியில் முதல் மணிநேரம் முக்கியமானதாக இருக்கும்.
இந்தியா, பாகிஸ்தான் செய்யாத சாதனை; வங்கதேசத்தில் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை!
விக்கெட் முற்றிலும் நன்றாக விளையாடுவதை நான் உணர்கிறேன், இங்கிலாந்து விவேகத்துடன் பேட்டிங் செய்து, அவர்களது அணுகுமுறையில் நேர்மறையானதாக இருந்தால் அவர்கள் அங்கு செல்வார்கள். அவர்கள் ஒரு நேர்மறையான அணுகுமுறையுடன் ஷாட்டை தேர்வு செய்து விளையாடினால், ரன் சேஸை எட்ட முடியும் என்று கூறியுள்ளார்.