ஜம்மு மற்றும் காஷ்மீர் சென்ற சச்சின் ஜாம்நகரில் வாய் மற்றும் மூக்கு இரண்டும் ஒட்டியிருந்த குழந்தைகளுக்கு தனது அறக்கட்டளை மூலமாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மும்பையில் பிறந்து வளர்ந்து சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களும் குவித்துள்ளார். தனது 200ஆவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியானது. மேலும், சுற்றுலா செல்ல லட்சத்தீவு மிகச்சிறந்த இடம் என்று எக்ஸ் பக்கத்தில் கூறியிந்தார். இதைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடவே, மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வதை பெரும்பாலானோர் தவிர்த்தனர்.

Scroll to load tweet…

இந்தியாவிலேயே சுற்றுலா செல்வதற்குரிய இடங்களை தேடினர். இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலி, மகள் சாராவுடன் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அப்படி ஒரு வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இளைஞர்களுக்கான 2 முக்கியமான விஷயங்கள் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தான் சச்சின் தனது அறக்கட்டளை மூலமாக ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். அதில் குறைபாடுகளுடன் உள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறார். சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து அதில், சிரிப்பு என்ற பரிசை கடவுள் கொடுத்திருக்கிறார். நாம் சிரிப்பதற்கு மறந்து விடுகிறோம்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 குழந்தைகள் சிரிக்கவே முடியாத குறைபாடுகளுடன் பிறக்கின்றன. வாய் வேறு வடிவத்தில் இருப்பது போன்றும், மூக்கும் வாயும் ஒட்டியிருப்பது போன்றும் உள்ள குறைபாடுகள் குழந்தைகளுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளால் சிரிக்க கூட முடியாது.

இந்த நிலையில் சச்சின் தனது அறக்கட்டளை மூலமாக காஷ்மீரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்துள்ளார். இதன் மூலமாக வாய் மற்றும் மூக்கு பகுதிகள் சரிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களால் சிரிக்க முடிகிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளை சச்சின் தனது குடும்பத்தோடு சென்று பார்த்துள்ளார். குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களிடம் விவாதித்துள்ளார். இது தொடர்பான வீடியோவைத் தான் சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.