SA Vs WI: ஒரே நாளில் 17 விக்கெட், SA பேட்ஸ்மேன்களை அலறவிடும் WI பவுலர்கள்
தென்னாப்பிரிகா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி உள்ளார்.
மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களும் தங்கள் முழு திறனை வெளிப்படுத்திய நிலையில் முதல் போட்டி சமனில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கயானாவில் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிகா அணி டாஸ் வென்ற நிலையில், கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். குறிப்பாக ஷமர் ஜோசப்பின் அசுர வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்களை இழந்து திணறினர். இறுதியாக அந்த அணி 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
சச்சினின் சாதனை முறியடிப்பு? கோலி, ரோகித் லிஸ்ட்லயே இல்ல - பாண்டிங் சொன்ன புதிய வீரர்
தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா, வியான் மல்டர், கேஷவ் மகாராஜ், காகிசோ ரபாடா என 4 வீரர்கள் டக் அவுட்டவும், டோனி சோர்சி 1 ரன்னும் அடுத்த நிலையில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். தொடர்ந்து களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்ஸ்மேன்களுக்கு, தென்னாப்பிரிகா பௌலர்களும் தங்கள் மிரட்டலான வேகத்தால் பதிலடி கொடுத்தனர். இறுதியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.