ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சுப்மன் கில்லை நம்பி ஓடி வந்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த ரோகித் சர்மா, கோபத்தில் கில்லை திட்டிக் கொண்டே வெளியேறினார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பவுலிங் தரப்பில் இந்திய அணியைப் பொறுத்த வரையில் முகேஷ் குமார் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
ஷிவம் துபே ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 159 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில், 14 மாதங்களுக்கு பிறகு ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் விளையாட வந்துள்ளார். இது அவருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த நிலையில் தான் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.
கடைசில பயம் காட்டிய நபி, அசால்ட்டா தூக்கிய முகேஷ் குமார் – ஆப்கானிஸ்தான் 158 ரன்கள் குவிப்பு!
ரோகித் சர்மா மிட் ஆஃப் திசையில் அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடி வந்துள்ளார். ஆனால், பந்தையே பார்த்துக் கொண்டு இருந்த சுப்மன் கில் கடைசி வரை ஓடி வரவில்லை. எதிர் திசையின் எல்லைக்கே ஓடி வந்த ரோகித் சர்மாவால் திரும்பி செல்ல முடியவில்லை. இதன் காரணமக மிட் ஆஃப் திசையில் பீல்டிங்கில் இருந்த கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் பந்தை விக்கெட் கீப்பருக்கு வீச, அவரும் கச்சிதமாக ரன் அவுட் செய்தார். இதனால் கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற ரோகித் சர்மா சுப்மன் கில்லை திட்டிக் கொண்டே அங்கிருந்து வெளியேறினார். எனினும், எளிதில் ஓடி ஒரு ரன் எடுத்திருக்கலாம். ஆனால், கடைசி வரை சுப்மன் கில் ஓடி வரவே இல்லை.
மொஹாலியில் கடும் குளிர் – ஹாட் வாட்டர் பேக் பயன்படுத்திய இந்திய வீரர்கள்!
