மொஹாலியில் கடும் குளிர் நிலவும் நிலையில் இந்திய வீரர்கள் ஹாட் வாட்டர் பேக் பயன்படுத்தி பீல்டிங் செய்துள்ளனர்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தற்போது மொஹாலியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில், ஜித்தேஷ் சர்மா விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ளார். மேலும், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். அதோடு முகேஷ் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும், ஷிவம் துபே ஆல் ரவுண்டராகவும் அணியில் இடம் பெற்றுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
India vs Afghanistan T20I: யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏன் இடம் பெறவில்லை? இதோ வெளியான காரணம்!
விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக அணியில் இடம் பெறவில்லை. இதையடுத்து விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். லைட் வெளிச்சம் சரியில்லாத நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு போட்டியானது தொடங்கப்பட்டது.
முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த நிலையில் தான் மொஹாலியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் இந்திய வீரர்கள் பீல்டிங்கில் சற்று சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக ஒரு சில கேட்ச் வாய்ப்புகளையும் கோட்டவிட்டனர். ஷிவம் துபே தனது முதல் ஓவரிலேயே விக்கெட் கைப்பற்றினார். கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் 25 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Tamil Thalaivas: 8 தோல்விகளுக்கு பிறகு வெற்றி – நிம்மதி பெருமூச்சு விட்ட தமிழ் தலைவாஸ்!
மேலும், அவரது ஓவரில் ரோகித் சர்மா ஒரு கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டார். இந்த நிலையில் தான் குளிர் தாங்க முடியாத நிலையில் ஹாட் வாட்டர் பேக் பயன்படுத்தி வருகின்றனர். ரோகித் சர்மாவும் ஹாட் வாட்டர் பேக் பயன்படுத்தியுள்ளார். இதற்கு முன்னதாக பயிற்சியின் போது கூட இந்திய வீரர்கள் ஸ்வெட்டர் மற்றும் தலைக்கு மப்ளர், குல்லா, கைக்கு குளோஸ் அணிந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
