Asianet News TamilAsianet News Tamil

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் – 3 ஸ்பின்னர், 2 ஃபாஸ்ட் பவுலர்களை களமிறக்கிய இந்தியா – ஷிவம் துபேவிற்கு வாய்ப்பு!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

India won the toss and Choose to bowl first against Afghanistan in 1st T20I match at Mohali rsk
Author
First Published Jan 11, 2024, 6:56 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில், ஜித்தேஷ் சர்மா விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், இந்தப் போட்டியில் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் இருவரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டராக ஷிவம் துபே அணியில் இடம் பெற்றிருக்கிறார். விராட் கோலி இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வாலிற்கு இடுப்பு பகுதியில் புண் உள்ள நிலையில் அவர் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

Tamil Thalaivas: 8 தோல்விகளுக்கு பிறகு வெற்றி – நிம்மதி பெருமூச்சு விட்ட தமிழ் தலைவாஸ்!

இதுவரையில் இரு அணிகளும் 5 முறை டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

23 வயதில் சிறை: பாலியல் வழக்கில் கிரிக்கெட்டர் சந்தீப் லமிச்சனேவிற்கு 8 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு!

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன் (கேப்டன்), ரஹ்மத் ஷா, அஸ்மாதுல்லா உமர்சாய், நஜிபுல்லா ஜத்ரன், கரீம் ஜனத், குல்பதின் நைப், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான்.

England Lions vs India A: இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios