Tamil Thalaivas: 8 தோல்விகளுக்கு பிறகு வெற்றி – நிம்மதி பெருமூச்சு விட்ட தமிழ் தலைவாஸ்!

புரோ கபடி லீக் தொடரின் 65 ஆவது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியானது 46-27 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

Tamil Thalaivas beat UP Yoddhas by 19 points (46-27) difference in Pro Kabaddi League rsk

புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என்று 12 அணிகள் இடம் பெற்றுள்ளன.

England Lions vs India A: இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்!

அகமதாபாத், பெங்களூரு, புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்பூர், ஹைதராபாத், பாட்னா, டெல்லி, கொல்கத்தா, பஞ்ச்குலா ஆகிய பகுதிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சென்னையில் நடந்த 4 போட்டியிலும் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்துள்ளது. இதுவரையில் தமிழ் தலைவாஸ் 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 2ல் வெற்றி, 8 போட்டிகளில் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது.

23 வயதில் சிறை: பாலியல் வழக்கில் கிரிக்கெட்டர் சந்தீப் லமிச்சனேவிற்கு 8 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு!

இந்த நிலையில் தான் நேற்று 65ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், தமிழ் தலைவாஸ் மற்றும் உபி யோத்தாஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் உபி யோத்தாஸ் அணியின் கேப்டன் ரைடர் பர்தீப் நார்வால் 12 ரைடுகள் சென்று 2 ரைடுகளை வெற்றிகரமாக முடித்து 3 புள்ளிகள் பெற்றார். இதே போன்று ரைடர் ககனா கவுடா 7 ரைடுகள் சென்று 4 ரைடுகளை வெற்றிகரமாக முடித்து 4 புள்ளிகள் பெற்றுள்ளார்.

தேர்தல் நடந்தாலும் கவலையில்லை – இந்தியாவில் தான் ஐபிஎல், எந்த மாற்றமும் இல்லை – பிசிசிஐ திட்டவட்டம்!

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணியில் ரைடர் நரேந்தர் 18 ரைடுகள் சென்று 8 ரைடுகளை வெற்றிகரமாக முடித்தார். இதன் மூலமாக 14 புள்ளிகள் பெற்றார். ரைடர் அஜிங்கியா பவர் 17 ரைடுகள் சென்று அதில் 4 ரைடுகளை வெற்றிகரமாக முடித்து 5 புள்ளிகள் பெற்றார். இறுதியாக தமிழ் தலைவாஸ் அணி 46 புள்ளிகள் பெறவே, உபி யோதாஸ் அணியானது 27 புள்ளிகள் மட்டுமே பெற்றது.

நொய்டாவில் கிரிக்கெட் விளையாடிய போது இன்ஜினியர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!

இதன் மூலமாக தமிழ் தலைவாஸ் அணியானது 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக தமிழ் தலைவாஸ் அணி 3ஆவது வெற்றியை பெற்றுள்ளது. மேலும் விளையாடிய 11 போட்டிகளில் 8 தோல்வி, 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் விளையாடிய 10ஆவது போட்டியில் 8ஆவது தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது. உபி யோதாஸ் அணியானது விளையாடிய 12 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அதோடு, ஒரு போட்டையை டை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விளையாடிய போது விபரீதம் – ஒரே நேரத்தில் 2 போட்டி, 52 வயதான பிஸினஸ்மேன் பந்து தாக்கி உயிரிழப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios