ஞாயிற்றுக்கிழமை நொய்டாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பொறியாளர் (இன்ஜினியர்) ஒருவர் மாரடைப்பு காரணமாக மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது இன்ஜினியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் மாவெரிக்ஸ் லெவன் மற்றும் பிளேசிங் காளைகள் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் மாவெரிக்ஸ் லெவன் முதலில் பேட்டிங் செய்தது. இதில், இன்ஜினியரான விகாஸ் நெகி மாவெரிக்ஸ் லெவன் அணியில் இடம் பெற்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிங்கிள் எடுக்க ஓடிய போது நெகி மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, சக வீரர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அதன் பிறகு உடலை மீட்ட போலிசார் பிரேட பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விகாஸ் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருது மீண்டு வந்த அவர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த நிலையில், தான் கிரிக்கெட் விளையாடிய போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, இளைஞர்களிடையே மாரடைப்பு வழக்குகள் மிகவும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருவதற்கு நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களே காரணமாக சொல்லப்படுகிறது.
