கிரிக்கெட் விளையாடிய போது விபரீதம் – ஒரே நேரத்தில் 2 போட்டி, 52 வயதான பிஸினஸ்மேன் பந்து தாக்கி உயிரிழப்பு!
மும்பையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மற்றொரு போட்டியின் போது அடிக்கப்பட்டு பந்து வேறொரு போட்டியில் பீல்டிங்கில் நின்றிருந்தவர் தலையில் தாக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மும்பையில் திங்கள்கிழமை பிற்பகல் கிரிக்கெட் போட்டியின் போது 52 வயது நபர் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். தாதர் பார்சி காலனி ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் மாட்டுங்காவில் உள்ள தாட்கர் மைதானத்தில் நடந்த போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜெயேஷ் சவாலாவின் தலையில் பந்து தாக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, சவாலா காதுக்குப் பின்னால் தலையில் அடிபட்டு தரையில் விழுந்தார். "இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதே போன்று மற்றொருவர் கூறியிருப்பதாவது: கடந்த திங்களன்று 2 போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், ஒன்று தாதர் யூனியனிலும் மற்றொன்று தாதர் பார்சி காலனி மைதானத்திலும் நடந்தது. சாவ்லா, காலா ராக்ஸ் அணியில் இடம் பெற்று மாஸ்டர் பிளாஸ்டர் அணிக்கு எதிராக விளையாடினார்.
DPC ஆட்டத்தின் பேட்ஸ்மேன் ஒரு புல் ஷாட்டை அடித்தார். அவர் அடித்த பந்து சவாலாவின் தலையின் பின்புறத்தில் தாக்கியது. சரியாக சொல்லவேண்டுமானல, ஆஸ்திரேலியாவின் பில் ஹியூஸ் தலையில் பந்து தாக்கப்பட்ட உயிரிழந்தது போன்று என்று கூறியுள்ளார். குச்சி விசா ஓஸ்வால் விகாஸ் லெஜண்ட் கோப்பைக்காக 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான டி20 போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு போட்டியானது, தாதர் பார்சி காலனி ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதில், அந்த 52 வயதான பிஸினஸ்மேனும் இடம் பெற்றுள்ளார்.
டெஸ்ட், ODI பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி முன்னேற்றம்!
இந்த நிலையில், ஒரு போட்டியில் அவர் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது மற்றொரு போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்தானது அவரது காதுக்கு பின்னால் தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதனால், அவர் மயக்கமடைந்த நிலையில் கீழே விழுந்துள்ளார். அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.