ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி இப்போதே தனது ஜிம் ஒர்க் அவுட், பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 17ஆவது ஆண்டுக்கான திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுவரையில் விளையாடிய 16 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5 முறை டிராபியை வென்றுள்ளது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் 5 முறை டிராபியை வென்றிருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியானது சொதப்பி வரும் நிலையில், இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
டெஸ்ட், ODI பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி முன்னேற்றம்!
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களது கேப்டனையே மாற்றியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே தான். அதாவது, சிஎஸ்கே ஒரு முறை டிராபியை வென்ற நிலையில், 2 முறை மும்பை இந்தியன்ஸ் அணி டிராபியை வெல்ல வேண்டும் என்று ஆர்வமாக இருக்கும். இதுவரையில் அப்படிதான் நடந்திருக்கிறது.
கடந்த 2018ல் சிஎஸ்கே சாம்பியனான நிலையில், அடுத்து 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியனானது. 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே சாம்பியனான நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் சாம்பியனாக வேண்டும் என்று நோக்கத்துடன் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனி துபாயில் நியூ இயர் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார். முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இதுவரையில் ஓய்வில் இருந்து வந்த தோனி தற்போது ஜிம் ஒர்க் அவுட், பேட்டிங் பயிற்சி என்று தீவிரமாக இறங்கியுள்ளார்.
சொதப்பி தள்ளிய இந்திய மகளிர் அணி – ஆஸிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு: தொடரை கைப்பற்றுமா இந்தியா?
ராஞ்சியில் எம்எஸ் தோனி பயிற்சியை தொடங்கியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனுடன் தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி சீசன் என்பதால், இந்த சீசனை வெற்றியோடு முடிக்க தோனி தீவிரமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகன் அர்ஜூனா விருது பெறுவதை பார்த்து ரசித்த முகமது ஷமியின் தாய் – வைரலாகும் வீடியோ!
